18/09/2020

ஆண் குழந்தை பிறக்க,குழந்தை திடகாத்திரமாக பிறக்க...

 


பூசம் நட்சத்திரம் நாளில் ஆலமரத்த்தின் இரண்டு மலராத மொட்டுக்களை பறித்து பசும்பாலில் அரைத்து , கர்ப்பிணி பெண்ணுக்கு சாப்பிடகொடுக்கவும்...

இது பும்சவனம் எனப்படும்...

இது நான்காம் மாதத்தில் செய்யப்படும் சடங்கு...

இதை பெரும்பாலும் நாம் செய்வதில்லை..

ஏழாம் மாத்த்தில் வளைகாப்பு செய்வதோடு சரி.

ஆனால் அக்காலத்தில் இதை கடைபிடித்து இருக்கிறார்கள்..இத்துடன் இரண்டு உளுந்து ,கொஞ்சம் எள்ளு சேர்த்து இடித்து தயிருடன் கலந்தும் கொடுப்பர்..

கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு நான்காம் மாதத்தில் அவர்களுக்கு பிடித்தமான தின்பண்டங்களை கணவன் வாங்கி கொடுக்க வேண்டும்..

இந்த காலத்தில் கர்ப்பிணி விருப்பத்தை பூர்த்தி செய்யாவிட்டால் வயிற்றில் வளரும் குழந்தை பாதிக்கப்பட்டு அங்கம் குறைவாகிவிடும்..

ஆண் ஜாதகத்தில் 5ஆம் இடமும் பெண் ஜாதகத்தில் 9ஆம் இடமும் குழந்தை பிறப்பை சொல்கின்றன..

குரு, சுக்கிரன் கெடாமல் இருந்து 5ஆம் அதிபதியும் கெடாமல் இருந்தால் குழந்தை பாக்யம் உண்டு.

5ஆம் அதிபதி ஆண் ராசியில் இருக்கிறாரா பெண் ராசியில் இருக்கிறாரா..

அவர் நின்ற அதிபதி அதன் சாரம் நவாம்சத்தில் அவர் நிலை அறிந்தும் பலம் அறிந்தும் அறிய வேண்டும்...

பார்த்த கிரக பார்வைக்கும் கணக்கு இருக்கிறது சனி பார்த்தால் எத்தனை பிறந்தாலும் பெண் என்றும் சொல்வர்.

ஜாதகத்தையும் கணித்து ,குறைகளை போக்கி கொள்வது நல்லது..

முன்னோர் வழி சாபம் இருப்பின் அதை சரி செய்து கொள்ள வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.