18/09/2020

குழந்தை திருமணம் செல்லாது ஆனால் குழந்தை இராணுவ வீரன் செல்லும்?

 


17 வயது ஆண் மகன் திருமணம் செய்தால் அது குழந்தை திருமணம்.

அதை செல்லாது என்று சொன்ன உலக நாடுகள்..

முதலாம் உலக போரில் கிட்டத்தட்ட எல்லா நாடுகளும் 17 வயதிற்குட்பட்ட சிறுவர்களையே போரில் கலந்து கொள்ள வைத்தது..

இது என்ன நியாயம் ?

பிரிட்டன் அரசு 25 இலட்சம்.. 18 வயதிற்கும் குறைவான சிறுவர்களை தமது நாட்டிற்க்காக பயன்படுத்தி கொண்டது...

அது மட்டுமின்றி இன்றைய உருகுவே, சீனா, ஜெர்மன், ரஷ்யா, மற்றும் அமேரிக்கா முதற்கொண்டு சிறுவர்களை [அவர்கள் பார்வையில்] போரில் பங்கு பெற வைத்தது...

இதில் இந்த 17 வயதிற்கும் குறைவான ஆண்கள் [சிறுவர்கள்] பல எதிரி நாட்டு பெண்களின் கற்பை சூறையாடியும் உள்ளார்கள் என்கிறது ஒரு ஆய்வு..

அதே போன்று வயது மிகுந்த தம் சக இராணுவ அதிகாரிகளால் பாலியல் தொல்லைக்கு [ஓரின சேர்க்கைக்கு] ஆளாக்கப்பட்டுள்ளார்கள் இந்த சிறுவர்கள் என்றும் ஒரு புள்ளி விபரம் கூறுகிறது...

அது மட்டுமில்லாமல் இன்றைய ரஷ்யா குடும்பங்கள் இல்லாமல் அனாதையாக வீதியில் திரியும் சிறுவர்கள் மற்றும் சிறுமிகளை தமது இராணுவ பயிற்சி பள்ளியில் சேர்த்து இராணுவ தளவாடங்களை பயன்படுத்த கற்றுக் கொடுக்கிறது....

இப்பொழுதும் கூட இந்த சட்டத்தை அமல்படுத்தி வருகிறது ரஷ்யா..

இந்த பதிவு பல கேள்விகளுக்கு பதில்சொல்லும் சிந்தித்தால்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.