18/09/2020

அணு...

 


அணுவின் அணுவினை ஆயிரங் கூறிட்டு

அணுவின் அணுவினை ... அணுகவல்லார்க்கு

அணுவின் அணுவினை அணுகலுமாமே..

சித்தர்களின் அறிவியலின்படி எண்ணிலாக் கோடி அண்டங்கள், பேரண்டங்கள், தோன்றுவதற்கு மூல காரணமாக விளங்கி எல்லாப் படைப்புக்கும் அடிப்படையாக இருப்பது ஒரு அணு ஆற்றல்..

ஒரணுவை ஆயிரங் கூறாக்கினால் கிடைக்கும் அளவற்ற ஆற்றலையே சித்தர்களும் ஞானிகளும் பரமாணு என்று சொல்கிறார்கள்.

பரமாணு என்பது பிரிக்க முடியாத அணு என்பது பொருள்.

அந்தப் பரமாணுவே பரந்து விரிந்து கிடக்கின்ற அண்ட பேரண்டங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றது என்பதை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள்.

அணுவை சுற்றி மின் காந்தம் அமைத்திருப்பதை கண்டறிந்து கூறியவர்கள் சித்தர்கள்.

அவ்வை பாட்டியும் அணுவைத் துளைத்து என்று பாடி உள்ளார்..

சித்தர்கள் :

சித்தர்கள் என்பவர்கள் மருத்துவர்கள், அறிவியலாளர்கள் , மக்களை நல்வழி படுத்தும் சான்றோர்கள்.

நூறு ஆண்டுகள் கடந்து வாழும் சூத்திரத்தை கண்டறிந்தவர்கள்.

அவர்கள் கண்டறிந்த சித்த மருத்துவ முறையை நாம் மதிக்கக் தவறி விட்டோம்.

தீராத நோய்களுககெல்லாம் சித்த மருத்துவத்தில் தீர்வு உண்டு.

கடந்த ஆண்டு டெங்கு காய்ச்சலுக்கு சிறந்த மருந்து சித்த மருத்துவ முறையே என தமிழக அரசு அறிவித்த பொழுதே தமிழர்கள் அதன் பயனை சிறப்பை முழுமையாக உணர்ந்தனர்.

இத்தகைய சித்த மருத்துவ முறையை சித்தர்கள் ஓலை சுவடிகளில் தங்களது தாய் மொழியான தமிழிலேயே எழுதி வைத்துள்ளனர்..

இதையும் இன்று சித்தா என்று ஆங்கில தழுவலில் கூறும் மூடர்களை என்ன வென்று சொல்வது ..

வானியல் அறிஞர்கள் :

பூமி உருண்டை என்றும், சூரியனை சுற்றியே ஒன்பது கோள்கள் வலம் வருகின்றன என்றும், அதைத் தொடர்ந்து நிகழும் கும்மிருட்டு, முழுநிலவு மற்றும் பருவ மாற்றங்கள் என அனைத்தையும் அன்றே கணித்த வானியல் வல்லுனர்கள் அனைவரும் தமிழ் மொழியில் பயின்றவர்களே.

சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே ஒன்பது கிரகங்களை நன்றாக கவனியுங்கள். அந்த சிலைகளின் மேல் கட்டப்பட்டுள்ள துணிகளின் நிறம் கோள்களின் நிறத்தை அடிப்படையாக கொண்டே இருக்கும்.

தமிழர்கள் என்றோ கண்டு பிடித்ததை , ஆங்கில அறிவு பெற்றவர்கள் இன்று கண்டறிந்து கூறுவதை நாம் உயர்வாக மதிக்கிறோம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.