26/06/2018

கோழி வறுவலில் விஷம் வைத்து 4 பேரை கொன்ற விவகாரத்தில், உயிரிழந்த இளைஞரின் சகோதரி உட்பட 2 பேர் கைது...


விருதுநகர் மாவட்டம், சிவகாசி சிறுகுளம் கண்மாய் அருகே மது அருந்திக் கொண்டிருந்த நண்பர்கள் 7 பேர் திடீரென மயங்கி விழுந்தனர். வாயில் நுரை தள்ளியபடி உயிருக்கு போராடிய அவர்களை, அப்பகுதி மக்கள் மீட்டு சிவகாசி மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தில் 15 வயது சிறுவன் கௌதம்,  கணேசன், முகமது இப்ராகிம், முருகன் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

இவ்விவகாரம் தொடர்பாக விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் தலைமையில் 7 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முருகனின் சகோதரி வள்ளி மீது போலீசாருக்கு சந்தேகம் எழவே, அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. வள்ளிக்கும், அவர் பணிபுரிந்து வந்த அச்சகத்தின் உரிமையாளர் செல்வத்திற்கும் தகாத உறவு இருப்பதாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்ததால் முருகன் மீது வள்ளி கோபத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் முருகன் குற்றாலம் செல்ல திட்டமிட்டிருந்ததை தனக்கு சாதகமாக பயன்படுத்தி அவரை கொல்ல வள்ளி முடிவு செய்துள்ளார். அதன்படி முருகன் வாங்கி வைத்திருந்த கோழி கறியில் விஷத்தை கலந்துள்ளார். இந்நிலையில் குற்றாலம் செல்வதற்கு முன் முருகன் தனது தம்பி மற்றும் நண்பர்களுன் மது அருந்தும்போது, விஷம் கலந்த சிக்கனை சாப்பிட்டதில் 4 பேரும் பலியானதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து வள்ளியை கைது செய்த போலீசார், கொலையில் வள்ளிக்கு உதவியதாக இருந்த அச்சக உரிமையாளர் செல்வத்தையும் கைது செய்தனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.