26/06/2018

எகிப்திய மாந்திரீகம்...


எகிப்தியர்களின் பிரமிடுகள் கலாச்சாரத்தையும், மாந்திரீகத்தையும், மந்திரம், தந்திரம், மருத்துவம், வாழ்க்கை நெறி ஆகியவற்றை எல்லாம் பறை சாற்றிக் கொண்டிருக்கிறது. எகிப்திய பிரமிடுகள் பண்டைய எகிப்தியர் தங்களுடைய வாழ்க்கைக்கு ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு கடவுளை உருவாக்கி இருந்தனர். போருக்கு ஒரு கடவுள், காமத்திற்கு ஒரு கடவுள், மாந்திரீகத்திர்க்கு ஒரு கடவுள் என்று அவர்களின் கடவுள்களின் எண்ணிக்கை அதிகம்.

கீக என்பது எகிப்தியர்களின் மாந்திரீகம், மற்றும் மருத்துவ கடவுளாகும். மருத்துவத்தையும், மாந்திரீகத்தையும் ஒன்றாகவே எண்ணினர். கீக கடவுள் மூலமாக எல்லா கடவுளின் அனுகிரகத்தையும் பெற முடியும் என்று எண்ணினர். வியாதியில் இருந்து பாதுகாப்பு, வாழ்க்கையில் பாதுகாப்பு கொடுக்கும் ஒரு உயர்ந்த கடவுள் என்று எண்ணினர். கீக கடவுளை மாந்திரீகத்தின் நன்மையையும், தீமையும் கொடுக்கும் ஒரு நடுநிலை கடவுளாக எண்ணியுள்ளனர். கீக கடவுளை மாந்திரீகத்தின் தாய் என்று எண்ணினார்கள். அவர்கள் ஆன்மீக வாழ்க்கையில் கீக கடவுளை மாந்திரீக வேண்டுதல் செய்யும்பொழுது அதற்கென்று சிலைகள், மந்திரங்கள், அபூர்வ கற்கள், பத்தி, வாசனைப் பொருள்கள், உணவுப் பொருள்கள், மது வகைகளைப் படைத்து இந்தியர்களைப் போல் வழிபாடு செய்துள்ளனர்.

கீக கடவுள் உருவத்தில் இரண்டு பாம்புகள் இருக்கும். அதைவைத்து தான் உலக மருத்துவ கழகங்களில் இரண்டு பாம்புகள் பின்னிக்கிடக்கும் வடிவத்தை அமைத்துள்ளனர். இறந்தவர்களுக்கு கீக கடவுள் மூலம் உணவு படைக்கும் பழக்கம் இருந்துள்ளது. எகிப்தியர்கள் தங்கள் வாழ்க்கைக்கும், மதநெறிகளுக்கும் உட்பட்டு மாந்திரீகங்களைச் செய்து வந்தனர் என்று தெரிய வருகிறது. அவர்கள் மாந்திரீகத்தை மனிதனுக்கு என்று படைக்கப்பட்ட ஒரு புனித செயலாக எண்ணினர். அவர்களும் இந்தியர்களைப் போல பொம்மை செய்து எதிரிகளைத் தாக்கும் வழி  முறைகளை உருவாக்கி வைத்துள்ளனர் என்று தெரிய வருகிறது.

அவர்கள் இந்திய மாந்திரீகவாதிகளைப் போல பொம்மைகள் செய்துள்ளனர். பொதுவாக அந்த பொம்மையை சிவப்பு மெழுகால் செய்வர். பின்னர் எதிரியின் பெயரை பச்சை முடியாலாகிய மையால் எழுதி நூலால் சுற்றுவர். பின்பு பாதிக்கபடவேண்டிய பகுதியில் ஊசி குத்தி பின்பு அதற்கென்று உள்ள மந்திரங்களை உபயோகிப்பர். பின்னர் அந்த பொம்மையை எதிரியாக நினைத்து வாளால் இரண்டாக வெட்டுவர். பின்னர் அந்த பொம்மையை தீயில் இட்டு எரித்து சாம்பலாக்கி சிறுநீர் கழிக்கும் இடத்தில் சாம்பலை புதைப்பர். அவர்கள்நோய்களுக்கு மருந்தும், மாந்திரீகத்தையும், ஒன்றாக இணைத்துச் செய்வர். ஏன்? இன்று கூட இந்தியாவில் கிராமங்களில் தீரமுடியாத வியாதிகள் இருந்தால் நோய்க்கும் பார், பேய்க்கும் பார். என்று கூறுவர். அவர்களிடம் பாம்புக்கடி, குழந்தைப் பிறப்பு, குழந்தை உண்டாக, மலச்சிக்கல் ஆகியவற்றிற்கு மந்திரங்கள் வைத்து இருந்தனர். இத்தகைய மந்திரங்கள் அரர்களைப் புதைத்த பிரமிடுகளின் சுவர்களில் காணப்படுகிறது. சுமார் 800 வகையான மந்திரங்கள் அந்த பிரமிடில் காணப்படுகிறது.

இன்று கூட அவர்கள் வழித் தோன்றல்கள் உலகின் பல இடங்களில் தங்களை மந்திரவாத மருத்துவர் என்று கூறிக் கொண்டு மாந்திரீக தொழில் நடத்துகின்றனர். அமெரிக்கா நாட்டில் இத்தகைய மந்திரவாதிகள் அதிகம் உள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.