04/01/2018

மனிதன் பிறப்பு முதல் இறப்புவரை லஞ்சம்..... வாழ்க தமிழகம்...


சுடுகாட்டில் உறவினர்களை அதிர்ச்சியடைய வைத்த சடலம்...

மதுரை புதுத்தாமரைப்பட்டியைச் சேர்ந்தவர் அன்னலட்சுமி. இவர் வீட்டு வேலை செய்பவர். புத்தாண்டு தினத்தன்று மாலை 7 மணி அளவில் ஒத்தக்கடை அருகே சாலையை கடக்க முயன்றபோது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளானார்.

விபத்துக்குள்ளான அன்னலட்சுமியை அவர் வேலை செய்யும் வீடுகளின் உரிமையாளர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இரவில் 11 மணியளவில் அன்னலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இறந்த உடலை பார்க்கச் சென்றவர்களிடம் தேவையற்ற காரணங்களைக் கூறி ரூபாய் 1,200 லஞ்சமாக பெற்றுக்கொண்டுள்ளார் பிணவறையில் வேலை செய்யும் மருத்துவமனை ஊழியர்.

மேலும் அன்னலட்சுமியின் உடலைப் பார்க்க வந்த அவரது மருமகனை பார்க்கவிடாமல் செய்துள்ளார் ஊழியர்.

இறுதியாக உடலை வாங்கச் சென்றவர்களிடம் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதனால், பொறுக்க முடியாத உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் ஆத்திரமடைந்த ஊழியர், அன்னலட்சுமியின் உடலுக்குப் பதிலாக வேறு ஒரு பெண்ணின் உடலை வெளியே தள்ளிவிட்டுள்ளார்.

அதை எடுத்துக்கொண்ட உறவினர்கள் இறுதிச் சடங்குகளை செய்வதற்காக சென்றுள்ளனர்.

மயானத்தில் உடலில் கட்டப்பட்டிருந்த துணிகளை எடுத்து பார்த்தபோது அது அன்னலட்சுமியின் உடல் அல்ல என்பது தெரியவந்துள்ளது. பிறகு மீண்டும் அந்த உடலை எடுத்துக்கொண்டு மருத்துவமனை நிர்வாகிகளிடம் முறையிட்டுள்ளனர்.

இதேபோல் சென்ற வாரம் ஆணின் உடலுக்குப் பதிலாக பெண் ஒருவரின் உடலை கவனக்குறைவாக அளித்துள்ளனர்.

தொடர்ந்து மருத்துவமனை ஊழியர்கள் இதுபோன்ற கவனக்குறைவான செயல்களில் ஈடுபடுவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.