ஜுலை மாதத்தில் மட்டும் பொதுமக்களிடமிருந்து ஜிஎஸ்டி வரியாக 92,283 கோடி ரூபாய் பெறப்பட்டுள்ளதாக மத்திய நிதிஅமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
இது எதிர் பார்த்ததை விட அதிகம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
செல்போனுக்கு ரிஜார்ஜ் செய்வதிலிருந்து மருந்து மாத்திரை வாங்குவதை வரை ஒரே மாதத்தில் ஒட்டு மொத்த நாட்டு மக்களும் அரசிற்கு வரியாக வழங்கிய தொகை கிட்ட தட்ட ஒரு லட்சம் கோடி..
குடிநீர் பிரச்சனை , சாலை பிரச்சனை , போதிய மருத்துவ வசதிகள் , மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளே இல்லாமல் இருக்கும் ஊர்கள் ஏராளம்.
மக்களிடம் வாங்கு வரியில் மோடி ஊர் சுற்றாமல்.. நீங்கள் கொள்ளை அடிக்காமல்.. பாதியையாவது மக்களுக்கு சென்றடையும் வண்ணம் செலவு செய்தால் நாடு நன்றாக இருக்கும் என்பதே வரி கட்டும் ஒவ்வொருவரின் ஆசையாக உள்ளது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.