24/10/2017

தன் சார்ந்த கட்சியின் கேவலத்தை கூறியதற்காக கதறிய பாஜக தமிழிசை மற்றும் ஹரிஹர ராஜா ஷர்மா...


ஒரு பிஞ்சு கருகியதற்கு இரங்கல் கூட தெரிவிக்காமல் சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய வேண்டும் என்று பேசாமல் பொத்திக்கொண்டு இருப்பதை நினைக்கிற பொழுது.

இவன் தான் மக்களின் பிரதிநிதி துடித்து கொண்டு வந்து விட்டானே என்று உங்களுக்கு தோன்ற வேண்டும்.

இல்லையேல் நீங்க ஆண்டி இந்தியன் தான்.

அப்படியே பேசினாலும் நேரடியாக அந்த குடும்பத்துக்கு ஆறுதல் கூறுவதாகவோ அல்லது நேரில் சென்று பார்பதாகவோ இருக்கவே இருக்காது.

பேசுகையில் கூட திராவிடம் அல்லது இத்தாலி அல்லது மத அடிப்படை வாதிகள் இப்படி தான் பேசுவான்.

தான் சார்ந்த பெண் நுங்கம்பாக்கம் இரயில் நிலையத்தில்  படுகொலை செய்யப்பட்ட பொழுது மூக்கை நுழைத்த எந்த சேகரையோ எந்த பரதேசிகளையும் இவ்விடயத்தில் காணலை...

இவனுங்க தாங்க நீதியான ஆட்சியை கொடுக்க கூடிய பரதேசிகள் என நம்புவோமாக..

இதே தற்கொலை ஒரு அயல்நாட்டில் நடந்தால் அந்த அயல்நாடு இந்த சம்பவத்திற்காக இந்தியாவிடம் பதில் சொல்லியே ஆகவேண்டும்

ஆனால் இந்தியாகுள்ள நடந்தால் ஒருத்தனும் மதிக்கமாட்டான்.

இந்தியனுக்கு அயல்நாட்டில் தான் மரியாதையே தவிர சொந்த நாட்டில் இல்லை...

முகநூலில் இப்படி கருத்து பதிவதால் என்ன நன்மை பயக்கும் என்று நினைப்பவர்கள் அதை மாற்றிக்கொள்ளவும்.

காரணம் இங்கு கருத்துப்பதிவிடுவது எல்லாமும் கத்திக்கு சானை தீட்டுவது போன்றே..

ஒரு நாள் கருத்தை ஏற்றி ஏற்றி கருத்தால் குத்தப்படும் குருதிக்கு பதில் சிந்தனை உதிரப்படும் அப்போது அறிந்து கொள்வீர் எம்மவர்கள்

தமிழர்கள் யார் என்று ..

சிந்தியுங்களேன் எ(இ)ப்போது கழுதை போன்று கதறும் ஹரிஹர ஷர்மாவிடம் கேளுங்கள் இந்த உங்கள் ஆட்சியில் ஊழல் உண்டா என்று?

கதறுவான் இல்லையென..

பின்னர் கேளுங்கள் வியாபம் பற்றி என்னவென்று?

உங்களில் ஒருத்தன் 15 இலட்சம் தருகிறேன் என்றானே இப்போது என்ன ஆயிற்று என்று கேளுங்கள் தெளிவாக தெரிகிறது இதெல்லாம் ஊழல் என.

ஒரு சாலையில் நின்று (பிச்சை) வசூலிக்கும் போக்குவரத்து காவலாலியிடம் எதை முன்னிலை வைத்து புகார் கொடுப்பீர்

ஆள்பவன் அடிக்கிறான் அரசு அதிகாரியும் அடிக்கிறான் இதெல்லாம் இத்தாலி நாட்டிலா நடக்கிறது இல்லை ஆள்பவன் இத்தாலியனா?

எவனை யோக்கியன் என கூறிவிட முடியும்?

எடப்பாடி இவனையெல்லாம் அந்த ஜெயலலிதா இருக்கும் போது கூட எவனுக்கும் தெரியாது இப்போது முதலமைச்சர் என்றால் பேரம் பேசாமலா ?

அட போங்கடா...

ஜெயலலிதா இருக்கும் வரை ஆட்சி சரியில்லை என்று கதறியவன் இப்போது நாய்களுக்கு பொரை போட்டதும் அமைதியாவது போன்று எப்படி அமைதியானது இந்த கும்பல் எல்லாமும் திட்டமிடல், பேரம் தான் வந்தது கொஞ்சம் வராதது

எவ்வளவோ ?

சரியான ஆண்மை உள்ளவனாக இருந்தால் எம் மக்கள் அங்கே மூத்திரத்தை குடித்து போராடுகிறானே என யோசித்து இருக்க வேண்டும் அல்லவா? ?

இப்பெல்லாம் புது டிரெண்ட் வச்சிருக்கானுவ செத்துப்போன குடும்பத்தினருக்கு முதல்வர் 2 லட்சம் குடுத்துவுட்டார் என்று அடேயப்பா என்னமோ சொந்த காசை கொடுப்பது போன்று.

 தோழர்களே , அல்லது சகாக்களே..

நம்மை தூங்கவிடாமல், நிம்மதியாகவும் இருக்க விடாமல் ஒரே நாளில் பணம் செல்லாது என்பான் அடிச்சி புடிச்சி சாகடித்த தேசம் இது?

எப்படி தேசப்பற்றை மனதில் சுமக்க முடியும்.

சிலைக்கு 3,0000 கோடி கொடுக்க தெரிந்த முட்டாளுக்கு பயிர் கடனை தள்ளுபடி செய்ய வக்கு இல்லையே அதுவும் தமிழகத்தில் மட்டும். .

லட்சத்தில் கோட்டு போட்டவனுக்கு இந்தியா முழுவதும் உள்ள சாலையை சீரமைக்க துப்பு இல்லையே?

அரசாங்க அதிகாரிகள் என்னவோ வேற்றுகிரக மனிதர்கள் போன்று நம்மை மதிக்காமல் இருப்பதற்கு காரணம் இந்த மோ(டுமுட்)டி வகையறாக்கள் தானே..

ஒரே ஒரு வார்த்தை மான்கிபாத் என  (அட இதுக்கு கூட எத்துனையோ லட்சமாம் மக்களோட பணம்)  பேசுரானுகளே அதாவது எந்த அரசு அதிகாரி மீதாவது மக்களிடம் இருந்து தொடர்ந்து 3 முறை புகார் வந்தால் அவரை அப்பதவியை விட்டு நீக்கிவிடுவோம் என்று கூற கோடிக்கணக்கில் பட்ஜெட் ஒதுக்க வேண்டுமா இல்லையே ஒரு வார்த்தை தானே.

கடைசி வரை இப்படி கூறமாட்டான் காரணம் அது உள்ளுக்குள் இருக்கும் சாதிய வெறி.

மலம் அள்ளும் மனிதனெல்லாம் எங்களை பார்த்து கேள்வி கேட்கலாமா?

 இதுவல்லவா தேச துரோகம்.

 ஆனால் மலம் அள்ளும் மனிதனின் வரி காசு மட்டும் இனிக்கிறது கையில் வாங்கி கண்களில் ஒத்திக்கொள்கிறான் இறுதியாக.

இவனுங்கட்ட உள்ள தேச பக்திக்கு உள்ள எடுத்துக்காட்டு..

ஒரு இராணுவ அதிகாரி தமக்கு இந்திய அரசால் கொடுக்கப்பட்ட உணவை காணொளியாக காட்டினார் அல்லவா அவரது நிலை என்ன தெரியுமா? 

உடனடியாக அவர் மீது நடவடிக்கை எடுத்து அவரை தகுதிநீக்கம் செய்தது தான் சாதனை ஆகையினால் இவர்கள் கூற வருவது என்ன நான் என்ன கொடுப்பனோ அதை தான் நீ உண்ண வேண்டும் எதிர்த்து கேள்வி கேட்டால் இதான் நிலை இது அவருக்கு மட்டும் அல்ல அங்கே உள்ள ஒவ்வொரு இராணுவ வீரர்களுக்கும் இதான். ..

இது மோடி மட்டுமல்ல அதே இடத்தில் அப்துல் கலாமோ பெரியாரோ அண்ணாவோ காமராஜரோ யாராக இருந்தாலும் கேள்விக் கேட்கத்தான் செய்வோம்...

தமிழர்களை சிந்திக்கவும் விடாமல் போராட்டம் ஆர்ப்பாட்டம் மறியல் அரசுக்கு எதிராக முற்றுகை தூக்கு மாட்டல் இப்படி எவ்வளவைதான் தாங்குவது? ?

இவனுகளை ஆட்டத்தை அடக்க தமிழன் தான் தமிழகத்தை ஆள வேண்டும் என்பதில் என்ன தவறு.

ஆமாம் அப்படிதான் கூறுவோம்.. 

தமிழகத்தை தமிழன் தான் ஆள வேண்டும்..

இப்படிக்கு
ஆண்டி இந்தியன்
ஆண்டி மோடி
ஆண்டி தேச துரோகி..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.