முடிவுரை:
ஒருவேளை, 2006ம் ஆண்டிலிருந்து தி.மு.க. கூட்டணியில் வைகோ நீடித்திருந்து, ஈழத்தமிழர்களுக்காக மத்திய அரசும் ஆளும்தி.மு.க. அரசும் எதையும் செய்யவில்லை என்று 2009ம் ஆண்டு வைகோ கூட்டணியிலிருந்து வெளியேறி இருந்தால், அவரது பின்னால் வேறு கட்சிகளும் அணிவகுத்திருக்கும். ஏன், ம.தி.மு.க. அணியில் பா.ம.க. விடுதலைச்சிறுத்தை, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் வந்திருக்கும். அந்த வைகோவை இன்று யாருமே வீழ்த்தி இருக்க முடியாது.!
சில விளக்கங்கள்:
இந்தப் பதிவை கண்ட வாசகர்கள் கடுமையான கண்டனத்தையும், அதே வேளையில் மிகுந்த பாராட்டுக்களையும் பதிவு செய்து வருகிறார்கள். பாராட்டுக்கள், திட்டுக்கள் இரண்டையுமே தமிழ் லீடர் சமமாகவே எடுத்துக் கொள்ளும்.
இது ஒரு விவாதம். வைகோ மீது பணம் வாங்கினார் என்று குற்றச்சாட்டு எழுப்பவில்லை. அரசியலில் மோசடி செய்தார் என்று எழுதவில்லை. அவர் எடுத்த முடிவின் காரணமாக இதெல்லாம் நடந்திருக்கிறது என்பதைத்தான் இந்தப் பதிவு சொல்கிறது.
அவர் ஈழ விடுதலையில் காட்டிய உறுதி என்றுமே மறுக்க முடியாது. மறைக்க முடியாது. தமிழ்நாட்டு மக்கள் மீது காட்டும் அதே பாசமும் நேசமும், ஈழத்தமிழர்கள் மீதும், இந்திய மக்கள் மீதும் அவர் வைத்திருக்கிறார் என்பதும் மறுப்பதிற்கில்லை.
காரணம், 2011ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் வாரத்தில் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் கூட்டணிக்காக அங்கேயும் இங்கேயும் ஓடியாடிக் கொண்டிருந்த நேரம்.
அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து ம.தி.மு.க. நீடிக்குமா நீடிக்காதா என்ற விவாதம், அதாவது தனது கட்சிக்கு இத்தேர்தலில் பாதுகாப்பு இருக்கிறதா இல்லையா என்ற விவாதம் எழுந்த நிலையில், ஜப்பானில் சுனாமி ஏற்பட்டு, அணு உலை வெடித்துவிட்டது.
அந்த நேரத்தில் வைகோவிடம் இருந்து ஓர் அறிக்கை.
கல்பாக்கத்தில் இருக்கும் அணு உலையின் பாதுகாப்பு குறித்து ஓர் ஆய்வு செய்ய வேண்டும் என்று அதில் தெரிவித்திருந்தார்.
எந்தச் சூழ்நிலையிலும் அவர் இந்தியாவையும் தமிழ்நாட்டையும் நேசித்தார் என்ற போது மெய் சிலிர்க்கிறது.
அதே வேளையில், ஐந்தாண்டு காலமாக ‘குடும்ப ஆதிக்கமா…. இல்லை தமிழ்நாட்டின் ஜனநாயகமா…
நீங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள்’ என்று முழக்கமிட்ட வைகோ ஏன் இந்த முடிவு எடுத்தார் என்பதுதான் ம.தி.மு.க.வினரின் மனதில் எழுந்த வேதனை.
2006 தி.மு.க. கூட்டணியில் அவர் நீடித்திருந்தால் என்ற அடிப்படையில் தான் இந்த கருத்து ஓர் விவாதமாக, கட்டுரையாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
காரணம், உலகத்தில் எது நடந்தாலும் குறிப்பாக தமிழர்களுக்கு ஏதாவது நல்லது நடந்துவிட்டால், அது தன்னால்தான் நடந்தது என்று அறிவித்து மகிழ்ந்துக் கொள்ளும் அளவுக்கு மனம்(!) படைத்தவர்தான் கருணாநிதி.
அப்படிப்பட்டவருடன் கூட்டணியில் இருந்து கொண்டு, ஈழத்தமிழர்களின் போரை நிறுத்த வேண்டும் என்று வைகோ தனியாக புறப்பட்டிருந்தால், அவருக்கும் பேரும் புகழும் கிடைத்துவிடும் என்று அஞ்சி, கருணாநிதியும் வைகோவின் இழுத்த இடத்துக்கு வந்து, காங்கிரஸை எதிர்த்து இருப்பார் என்பதுதான் இக்கட்டுரையின் மையக் கருத்து.
நன்றி:http://tamilleader.in/vivada/76-2011-03-28-13-40-06.html
2016ல் மீண்டும் திமுக வுடன் கை கோர்கிறார் தன்மானச் சிங்கம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.