28/09/2020

நாம் கொடுப்பதையே திரும்பப் பெறுவோம்...

 


விவசாயி ஒருவர் தினமும் தனது வீட்டிற்கு அருகே உள்ள இனிப்புக் கடைக்கு 1 பவுண்ட்  வெண்ணையை விற்கும் வழக்கம் கொண்டிருந்தார்.

ஒரு நாள் இனிப்புக் கடைக்காரர் அந்த வெண்ணையில் அளவை சோதித்து பார்க்க அதில் சற்று குறைவாக இருந்தது , உடனே அந்த கடைக்காரர் விவசயியின்மேல் குற்றம் சுமத்தி அவரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றார்.

நீதிபதி அந்த விவசாயியைப் பார்த்து நீங்கள் எந்த அளவுகோலில் தினமும் வெண்ணையை எடை போடுவீர்கள் என்று என்னிடம் காண்பியுங்கள்  என்றார்.

உடனே விவசாயி அய்யா என்னிடம் எடைக் கற்கள் கிடையாது , தராசு மட்டுமே உள்ளது ,நான் நீண்ட நாட்களாக இவரின் கடையில் ஒரு பவுண்ட் இனிப்பு வாங்கும் பழக்கம் கொண்டுள்ளேன் , நான் தினமும் அவரின் கடையிலிருந்து வாங்கிவரும் இனிப்பை வைத்து தான் வெண்ணையை அளப்பேன் என்றார்.

விவசாயில் பதிலைக் கேட்ட நீதிபதி அவரின்மேல் தவறு இல்லை என்று கூறி கடைக்காரருக்கு அறிவுரைக் கூறி விடுவித்தார்.

கதையின் மூலம்  கற்க வேண்டியவை...

நாம் எதை மற்றவர்க்கு தருகிறோமே அதனையே திரும்பப் பெறுவோம்..

நாம் நன்மை செய்தால் நிச்சயம் நமக்கு நன்மையே வந்து சேரும்..

நம்முடைய முழு உழைப்பையும், திறமையையும் தொழிலில் செலுத்தினால் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வை விரைவில் பெறுவோம்..

மாறாக நமக்கு தொழிற்சாலையில் சம்பளம் குறைவு என்று எண்ணி நேரத்தை வீணடித்துக் கொண்டிருந்தாள் நம்மை வேலையை விட்டு நீக்கும் நிலமை கூட ஏற்படலாம்..

கொடுப்பதையே திரும்பப் பெறுவோம் என்பதனால் நல்லதையே கொடுப்போம் , நல்லதே பெறுவோம் நண்பர்களே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.