11/02/2019

வேற்றுக்கிரகவாசி உண்மைகள் - பாம்பு...


பாம்பு கடிப்பதும் பாம்பைப் பிடிப்பதும் பாம்பை உண்பதும், பாம்பை வளர்ப்பதும் பாம்புவித்தை காட்டுவதும் எனப் பாம்புகளோடு மனிதனுக்கு உள்ள தொடர்பு விரிவானது. உண்பதைத் தவிர (அதுவும் உண்டு இன்றைய காலங்களில்) மேற்குறிப்பிட்ட எல்லா வகைகளிலும் பாம்போடு நெருங்கிய உறவு மனிதனுக்கு உள்ளது.

சிங்கம், புலி, கரடி போன்ற உருவில் பெரிய காட்டு உயிரிகளைக் காட்டிலும் உலகினர் அதிகம் அஞ்சும் விலங்கு உருச்சிறிய பாம்பாகவே இருக்கிறது. அஞ்சுவதை வணங்கிச் சமாளிப்பது மனித சாமர்த்தியம்.
காட்டைக் கொன்று நாடாக்கிய வீரர்கள் அதிகம் கொன்றது பாம்பாகவே இருந்திருக்கலாம்.
காண்டவ வனம் நமது இதிகாச சாட்சி. ஆக, பயத்தின் அடிப்படையில் கிராமங்களில் தெய்வமானது பாம்பு. 

தங்கள் வீரத்தைப் பறைசாற்ற விரும்பிய அரசர்களுக்குக் கொடியானது பாம்பு. வணங்கும் தெய்வமானாலும் ஊரும் வாகனமானாலும் பறக்கும் கொடியானாலும் அடிப்படையில் உறைந்திருப்பது பாம்பு பற்றிய பயம், மனிதனின் அச்சம் மற்றும் அவன் தான் வணங்கிய கடவுளர்களிடமும் அதை கண்டான்.

சிவபெருமான்: வாசுகியை கழுத்தில் ஆபரணமாக அணிந்துக் கொண்டு, தன்னை முழுவதுமாக வளைக்க அனுமதிக்கிறார். மற்றும் தன்னை ஒரு அச்சமற்ற நித்தியமானவராகக் வெளிப்படுத்துகிறார்.

விஷ்ணு: ஆதிசேசன் படுக்கையில் இருந்துகொண்டு, மூன்று உலகங்களை ஆதரித்து, தன்னை காலமற்ற மற்றும் முடிவிலா மற்றும் அண்டத்தில் முழு அண்ட சக்தியாகவும் சித்தரிக்கிறார்.

புத்தர்: இவருக்கு ஞானம் கிடைத்ததும் ஒரு பாம்பின் அரவணைப்பில் தான் என்கிறார்கள்.
மேலும் விநாயகரின் இடுப்பை சுற்றி ஒரு பெல்ட் போல அணைத்துள்ளது.
இதுபோன்ற பல மேற்கோள் உள்ளது. ஆனால் இந்த நடைமுறைக்கு முற்றிலும் விதிவிலக்காக இன்றிருக்கும் ஒரே கடவுள் கந்தசாமி மட்டுமே. இந்த பாம்பை (Reptilians) தனது காலடியில் குறிப்பாக தனது வாகனத்தின் காலடியில் இந்த பாம்புகளை வைத்துள்ளார். தனக்குக் கீழ்தான் தீமைகள் என்று உணர்த்த விரும்பிய கந்தன் தனது காலடியில் சர்ப்பத்தை (Reptilians) அடக்கியுள்ளார்.

பாம்பு பற்றிய ஆதிப்பதிவுகள் பாம்பு - மனிதப் பகை உறவையே காட்டுகிறது.

விரியன் பாம்புப் பரம்பரைகளே, நீங்கள் தீயவர்களாயிருக்க, நல்லவைகளை எப்படி பேசுவீர்கள்? இருதயத்தில் நிறைந்திருப்பதையே வாய் பேசும். -(மத்தேயு 12:34)

இவ்வசனத்தில் ஒரு தீய சமூகத்தவரைப் பார்த்து “விரியன் பாம்புப் பரம்பரைகளே” (விரியன் பாம்புக் குட்டிகளே) என்று கூறப் படுகிறது. இங்கு “விரியன் பாம்புகள்” என்பதன் மூலம் அர்த்தம் கொள்ளப் படுவது வேறு யாருமல்ல; விரியன் பாம்பு போன்ற ஏதோ ஓர் இனத்தைச் சார்ந்தவர்கள் (Reptilians) என்பதே இங்கு மறைமுகமாகச் சொல்லப்பட்டிருக்கும் செய்தி.

இன்னொரு வசனத்தில்:

தேவனாகிய கர்த்தர் உண்டாக்கிய சகல வன ஜீவன்களைப் பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது. அது ஸ்திரீயை (ஏவாளை) நோக்கி: “நீங்கள் தோட்டத்திலுள்ள சகல விருட்சங்களின் கனியையும் புசிக்கவேண்டாம் என்று தேவன் சொன்னது உண்டோ?” என்றது.
(ஆதியாகமம் 3:1)

இந்த வசனத்தில் குறிப்பிடப்படும் சம்பவம், ஆதம் மற்றும் ஏவா சுவர்க்கச் சோலையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்த போது, அங்கிருந்த தடுக்கப்பட்ட மரத்தின் கனியை அவர்களைப் புசிக்கச் செய்வதற்குத் திருட்டுத்தனமாக அங்கு வந்த சர்ப்பமானது, அவர்களை நம்ப வைத்து ஏமாற்றும் காட்சியையே வர்ணிக்கிறது.

நிச்சயமாக அவன் (ஷைத்தான்) உங்களுக்கு பகிரங்கமான எதிரி ஆவான்.
(அல்குர்ஆன் 2:208)

“பாம்புகளோடு நாம் எதிரியானது முதல், என்றுமே அவர்களோடு நாம் சமாதானமானதில்லை” எனும் வாசகத்தையும் பொருத்திப் பார்த்தாலே Reptiliens இனம் என்றுமே மனிதர்களுக்கு ஏதிரானது என்ற உண்மை வெளிப்படுகிறது.

பொதுவாக உலகில் தோன்றிய பழமையான வேதங்களில் பாம்புகள்
தீமையின் உருவமாக கருதப்படுகிறது. ஆனால் இந்து மதத்தில் தெய்வீகமாக  கிட்டத்தட்ட அனைத்து முக்கிய இந்து தெய்வங்களுடனும் இணைந்த சிலைகளில் தொடர்புடையதாக இருக்கின்றது. தெய்வங்களாகவும் வாகனாதிகளாகவும் கோயில் கலாச்சாரத்தில் பாம்புகளின் ஆதிக்கம் அதிகம். காலசர்ப்ப தோஷத்திற்கும் பஞ்சாங்கத்திற்கும் சோதிட உலகில் இன்றும் மதிப்பு குறையவில்லை.

அவை நமக்கு அறிவுறுத்துவது, இந்த கடவுளர்களின் ஞானம், சக்தி போன்றவை இந்த பாம்புகளின் அரவணைப்பு அல்லது கட்டுப்படுத்தலின் மூலமே கிடைத்தது என்பதாகும்.

அடக்கப்பட்டதன் அடையாளமாக அரனார் கழுத்தில் இருந்தாலும். அவர் மகனாரின் மயிலின் காலில் மிதிபட்டுச் சிதைந்து காட்சி தருகிறது Retiliens. எனவே இந்த நடைமுறையிலிருந்து விதிவிலக்காக உள்ள நம் முப்பாட்டன் வேலனை வழிபட்டால் தீய சக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன், அந்த சக்திகள் நமக்கு அடிபணிந்து நல்லருளை நல்கும்.  காவடி, பால்குடம், அலகு குத்துதல், தேர் இழுத்தல், தீ மிதித்தல் என நேர்த்திகடன் செலுத்துவதை  பார்க்கும் பொழுதெல்லாம்  உணர்ந்து கொள்ளமுடிகிறது, உண்மையான இறைசக்தி எதுவென்று...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.