03/07/2018

வெற்றிலைத் தட்டம்...


வெற்றிலைத் தட்டம் பித்தளை உலோகத்தினாலான பாதமும் ஒரு சாண் வரை உயரும் தண்டும் மேற்புறம் அகன்று விரிந்த வளைவான மேற்புறமும் கொண்ட பித்தளைப் பாத்திரம் ஆகும்.

இந்தியா, இலங்கை உட்பட தென்கிழக்காசிய நாடுகளில் வெற்றிலையும் வெற்றிலைத் தட்டமும் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன.

தமிழர் விருந்தோம்பலிலும், வாழ்வோட்ட சடங்குகளிலும் இவை சிறப்பான ஒர் இடத்தைப் பெறுகின்றன.

தென்னிந்தியாவில் வெற்றிலைக் காளாஞ்சி எனவும் இலங்கையின் வடபுறத்தில் கால் தட்டம் என்றும் இது அழைக்கப்படுகிறது.

விருந்தாளிகள் வீட்டுக்கு வருகின்ற போது முதலில் வெற்றிலை கொடுத்து அவர்களை உபசரிக்கும் மரபு அண்மைக்காலம் வரை வழக்கில் இருந்தது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.