இராமநாதபுரத்தில் புதிதாக அமைய உள்ள அனல்மின் நிலையத்தை எதிர்த்து நேற்று 4 பெண்கள் தீக்குளித்து சாக முயற்ச்சி...
உங்களுக்கு இந்த சந்தேகம் எழுந்தால் நீங்களும் அறிவானவர்கள்தான், உங்கள் பிள்ளைகள் எதிர்காலத்தை பற்றி உண்மையான அக்கரை கொண்டவர்கள் தான்...
அனல்மின் என்பது பெட்ரோல் டீசல் தட்டுபாடால் அடுத்து ஸ்கூட்டர், கார், பஸ்களை மின்சாரம் மூலம் இயக்க உள்ளது கார்பரேட் அம்பானி அரசு! ஏற்கனவே சுகவாசிகள் ஏசி, பிரட்ஜ் என இயற்கையை கற்பழித்தவர்களால் அதன் தொழிற்சாலை வளர்ச்சிகளால் மின் தேவை ஏற்கனவே அதிகமாகி உள்ளதை இயற்கையை பத்திரமாக அடுத்த தலைமுறைக்கு கொடுக்க நினைப்பவர்களுக்கு தெரிந்திருக்கலாம்.
பணமதிப்பீட்டு மூலமாக திரட்டிய ஏழை எளிய மக்களின் பணத்தை அதானி குழுமம் அஸ்திரேலியாவில் நிலக்கரி தோண்ட மோடி அரசு 6000 கோடி பணத்தை கொடுத்ததை, அங்குள்ள தமிழ் பழங்குடிக்கு ஆதரவாக Sydney கடற்கரையில் போராட்டம் நடந்தது சிலருக்கு நினைவிருக்கலாம். அங்கு தற்போது நிலக்கரி சுரங்கம் நஸ்டத்தில் ஓடுகிறது.
உலகமுழுக்க தற்போது நிலக்கரி தட்டுபாடு ஏற்பட்டுள்ளது, இந்திய அனல்மின் நிலையத்திற்கு தேவையான நிலக்கரி கையிருப்பு 4 மாதங்களுக்கு மட்டுமே உள்ளதாக கடந்த மாதம் செய்தி வந்ததை ஒரு சிலரே நினைவில் வைத்திருப்பர்.
இந்த நிலையில் இராமநாதபுரத்தில் பல புதிய அனல் நிலையம் அமைய காரணம் என்ன?
இதோ பதில்: அருகில் உள்ள டெல்டாவில் மீத்தேனுக்கு பிறகு, நிலக்கரி எடுக்கும் எதிர்கால திட்டம் என்பதை அம்பலபடுத்தியுள்ளது. அப்படி பூமி பளிக்கபட்டால் உணவு பஞ்சம், அதை தொடர்ந்து இயற்கை பேரழிவு வரும் நம் பிள்ளைகள் கொடுமையாக சாகும் என்பதை எச்சரிக்பட்டுள்ளதை நினைவில் கொள்ளுங்கள்..
அனல்மின் நிலையம் வானிலையிலும், அணுமின் நிலையம் மண்ணையும் உயிரிகளையும் அபாயகரமாக தாக்குவதால் மேலை நாடுகளில் இதன் உற்பத்தியை முற்றிலும் நிறுத்தி வருகின்றனர்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.