13/09/2017

பாஜக வும்.. பாஜக ஸ்லீப்பர் செல் நீதிபதியும்...


தமிழகத்தில் நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி கொடுத்த நீதிபதியின் பாஜக தொடர்பு அம்பலம்.

மத்திய அரசு நடத்தும் உண்டு உறைவிட  ஜவஹர் நவோதயா பள்ளிகள் மும்மொழி திட்டத்தை கடைப்பிடிப்பதால் கடந்த 30 ஆண்டுகளாக தமிழகத்தில் அனுமதிக்கப்படவில்லை.

இருமொழிக் கொள்கையை பின்பற்றிவரும் தமிழக அரசுகள் இவற்றை கொள்கை முடிவாக அனுமதிக்கவில்லை.

இந்நிலையில் தமிழ்வழியிலும் படிக்கலாம் என்ற நிபந்தனை தளர்வுடன் மத்திய அரசு நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் அமைக்கப்பட வேண்டும் என தெரிவித்திருக்கிறது.

பொதுநல வழக்காக குமரி மகாசபா செயலர் ஜெயக்குமார் தாமஸ் என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி கோரும் வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை தமிழக அரசுக்கு பதிலளிக்க உத்தரவு போட்டிருக்கிறது.

இந்த வழக்கை விசாரித்து தமிழக அரசு எட்டு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டவர்கள் நீதிபதி கே.கே. சசிதரன் மற்றும் நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன்.

நவோதயா பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்படுவதன் மூலம் மறைமுக ஹிந்தி திணிப்பையும் மாநில உரிமையை பறிக்கும் நடவடிக்கையாகவும் உள்ளதாக குற்றச்சாட்டு உள்ளது. மத்தியில் ஆளும் பாஜக அரசு தன்னுடைய அஜெண்டாவை அமல்படுத்துவதற்கு அதிமுக அரசு வழிசெய்து கொடுக்கிறது.

இந்நிலையில் நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதனுக்கு தமிழக பாஜகவுக்கும் உள்ள நெருக்கம்...

தமிழக பாஜகவின் வழக்கறிஞர்கள் பிரிவு கடந்த நவம்பர் 2016-ஆம் ஆண்டு ஏற்பாடு செய்திருந்த பொதுசிவில் சட்ட கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசியிருக்கிறார் நீதிபதி சுவாமிநாதன். அவர் கலந்து கொண்டு பேசியதன் விவரங்களை பாஜக இளைஞரணி துணை தலைவர் சூர்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

இப்போது தெரிகிறதா நவோதயா பள்ளி தமிழகத்தில் கொண்டு வருவதற்கான தீர்ப்பு  பின்னனி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.