கேரள மாநிலம் குருவிலங்காடு என்ற இடத்தில் கோட்டயம் ஆர்.சி மறைமாவட்டத்திற்குட்பட்ட ஆதரவற்றோர் இல்லம் ஒன்று இயங்கி வருகிறது. இதில் நிர்மலா என்ற கன்னியாஸ்திரி சேவை செய்து வருகிறார். கடந்த 2014ம் ஆண்டு இந்த ஆதரவற்றோர் இல்லத்திற்கு வந்த கோட்டயம் மறை மாவட்ட பிஷப், அருகில் உள்ள விருந்தினர் மாளிகைக்கு நிர்மலாவை அழைத்து சென்று பலாத்காரம் செய்தார்.
இதனை அடுத்து ஆய்வு செய்ய அவர் 13 முறை வந்தார். ஒவ்வொரு முறையும் அவர் நிர்மலாவை பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அவர் வட இந்தியாவில் உள்ள மறை மாவட்டத்தின் பிஷப்பாக இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் 4 ஆண்டுகள் கழித்து நிர்மலா என்ற அந்த கன்னியாஸ்திரி கோட்டயம் எஸ்.பி அலுவலத்தில் புகார் அளித்தார். அதில் பிஷப் தன்னை 13 முறை பலாத்காரம் செய்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதில் கூறி உள்ளார்.
சம்பவம் நடந்து 4 ஆண்டுகள் ஆகியும் இது குறித்து சர்ச் நிர்வாகிகளிடம் புகார் அளித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால்தான் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததாக கன்னியாஸ்திரி கூறி உள்ளார். பாவ மன்னிப்பு கேட்க வந்த பெண்ணை 5 பாதிரியார்கள் பலாத்கார சம்பவம் வெளிவந்ததை தொடர்ந்து தற்போது இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.