02/07/2018

இயற்கை சுவாசம் தரும் சாளரம்...


படத்தில் இருக்கும்  சாளரம் (ஜன்னல்) தான் அந்த இயற்கைக் காற்று மூலமாக இயற்கை சுவாசம் தரும் சாளரம்.

சாளரம் தான் மூடியிருக்கிறதே எப்படி இயற்கை சுவாசம் தரும் என்று கிடுக்கிப் பிடியாகக் கேட்க நினைக்கீறீங்க. இதோ விசயத்துக்கு வந்துட்டேன்.

இந்தசாளரத்தின் சூரிய மின்பலகை மூலமாக ஒரு உறிஞ்சும் விசிறி இயங்கி உள் இழுக்கிறது உள்ளே வரும் காற்றை எதிர் கொண்டு அதில் உள்ள கரிய மில வாயுவை உறிஞ்சிக் கொண்டு ஒட்சிசனை வெளி விடும் படி தாவரங்களும் சாளரத்துக்குள் இருக்கின்றன.

இந்த இந்த அடைத்த காற்றோட்ட அமைப்பின்(sealed ventillation system) பெயரே "இயற்கை சுவாசம்" (Original Breath) தான்.

கதவைத் திறங்க காற்று வரட்டும் என்பது இப்போது சாளரத்தை அடையுங்க சுத்தமான காற்று வரட்டும் என்றாகி விட்டது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.