13/08/2021

4 ஆண்டுகளாக தினமும் பஸ்சில் சவாரி செய்த பூனை...


இங்கிலாந்து நாட்டில் பிளைமவுத் நகரை சேர்ந்தவர் சூசன் பின்டேன்.

இவர் கேஸ்பர் என்ற 12 வயது பூனையை வளர்த்து வந்தார்.

இந்த பூனை அந்த நகர மக்கள் அனைவருக்கும் செல்ல பிராணியாக இருந்தது.

இது தினமும் காலை 10 மணிக்கு வீட்டு அருகே வரும் பஸ்சில் ஏறி, இலவச பயணம் செய்யும்.

அந்த பஸ் நகரின் பல பகுதிகளுக்கு சென்று விட்டு ஒரு மணி நேரம் கழித்து வீட்டு அருகே திரும்ப வரும்.

அப்போது அது இறங்கிக் கொள்ளும்.

கிட்டத்தட்ட 15 கி.மீ. தூரத்துக்கு அது தினமும் இலவச பஸ் பயணம் செய்யும்.

பஸ் ஏறும்போது பஸ் நிறுத்தத்தில் கூட்டம் இருந்தால் அது வரிசையில் நின்று தான் பஸ்சில் ஏறும்.

வழக்கமாக கடைசி இருக்கையில் தான் அது உட்காரும்.

நாள் தவறாமல் கடந்த 4 ஆண்டுகளாக அது பஸ் பயணம் செய்து வந்தது.

சரியான பஸ் நிறுத்தத்தில் அது இறங்கி சென்று விடும்.

சம்பவத்தன்று அது பஸ்சில் இருந்து இறங்கி சாலையை கடக்க முயன்றபோது, வேகமாக வந்த கார் ஒன்று அதன் மீது மோதியது.

இதில் அடிபட்டு காயம் அடைந்த அந்த பூனை இறந்து போனது...

20.01.2010 அன்று இவ்வுலகை விட்டு சென்றது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.