மோடி அரசு ஆட்சிக்கு வருவதற்கு முன் மார்ச் 23’ 2014 அன்று டெல்லியில் நடந்த ’யோக மோட்சம்’ என்ற நிகழ்வில் பாபா ராம்தேவ்வும் மோடியும் கலந்துகொள்கிறார்கள். அப்போது திடிரென்று ஒலிபெருக்கியின் முன் தோன்றிய ராம்தேவ் தனது தொண்டர்களிடம் நம் நாடு முன்னேற்றமடைய வேண்டாமா? ஊழலில்லாத இந்தியா நமக்கு வேண்டாமா? இதை உருவாக்காமல் நாம் வீட்டிலேயே முடங்க போகிறமோ இல்லை நாம் விரும்பிய இந்தியாவை உருவாக்கப்போகிறமோ என்று மிகவும் ஆக்ரோஷமாக கேட்டு இதெல்லாம் நீங்க வேண்டுமென்றால் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை நாம் ஆதரிக்க வேண்டுமென்று முதன்முதலில் மோடிக்கு ஆதரவாக வெளிப்படையான ஆதரவை தந்தவர் தான் பாபா ராம்தேவ்.
இதற்கான பிரதிபலனை தான் மோடி அவர்கள் பிரதமர் ஆனவுடன் சாமியாருக்கு வட்டியும் முதலுமாக கிட்டதட்ட 46 மில்லியன் டாலர் மதிப்புள்ள நிலங்களை சட்டத்தினை மீறி அவரின் பதஞ்சலி நிறுவனத்திற்கு கொடுத்தார்.
மோடி ஆட்சிக்கு வருவதற்கு முந்தைய மார்ச் 2013 வரை 156 மில்லியன் டாலராக இருந்த பதஞ்சலி நிறுவனத்தின் வியாபாரம் மோடி ஆட்சிக்கு வந்த 2015க்கு பின் அதாவது மார்ச் 2015ல் 322மில்லியன் டாலராக உயர்ந்தது.
அது 2016ல் 1.6பில்லியன் டாலராக அசுர வளர்ச்சியை எட்டி நிற்கிறது. இந்த அசுர வளர்ச்சிக்கு பின் மோடி அரசு பல சலுகைகளை சட்டவிதிகளை மீறி ராம்தேவ் நிறுவனத்திற்கு செய்துகொடுத்திருக்கிறது. அதாவது
பிஜேபி அரசு ஆளும் மாநிலங்கள் மற்றும் தனது கூட்டணியில் இருக்கும் மாநிலங்களில் கணக்கற்ற முறையில் பதஞ்சலி நிறுவனத்திற்கு நிலங்களை வாரி வழங்கியிருக்கிறது பிஜேபி அரசு. உதாரணத்திற்கு
அசாமில் அக்டோபர் 2014 மற்றும் நவம்பர் 2016 முறையே 1200ஏக்கர் நிலம் 100% சலுகையுடனும் மற்றும் 148 ஏக்கர் நிலம் 38% சலுகையுடனும் பதஞ்சலி நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல நாக்பூர் மகாராஷ்டிரா போன்ற பிஜேபி ஆளும் மாநிலங்களில் 234 ஏக்கர் நிலம் 78% சலுகையுடன் கடந்த செப்’2016அன்று கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும் உத்திரபிரதேசத்தில் நவ.2016ல் 300ஏக்கர் நிலம் 25% சலுகையுடனும், மத்திய பிரேதேசத்தில் பிப்2017ல் 40ஏக்கர் நிலத்தை 88% சலுகையுடனும் மற்றும் ஹரியானாவில் ஜன.2017ல் 52,000 ஏக்கர் சாதாரண விலையிலும் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இப்படி மொத்தமாக பார்த்தால் பிஜேபி ஆளும் மாநிலங்களில் மட்டும் 77% சலுகை விலையில் பதஞ்சலி நிறுவனத்திற்கு மோடி அரசு சலுகைகளை வாரி வழங்கியிருக்கிறது.
இதுபோக பதஞ்சலி நிறுவனத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளான மின்சாரம், போக்குவரத்து போன்றவற்றையும் தனது அதிகாரத்தை பயன்படுத்தி மோடி அரசு செய்துகொடுத்திருக்கிறது.
உதாரணமாக நாக்பூரில் பதஞ்சலி நிறுவன தொடக்க விழாவில் பிஜேபியில் தற்போதைய சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி கலந்து கொண்டார்.
அந்த விழாவில் பதஞ்சலி நிறுவனத்தின் 90க்கும் அதிகமான பங்குகளை வைத்திருப்பவரும் பாபா ராம்தேவ் வின் நண்பருமான பாலகிருஷண பேசும் போது
இந்த இடத்திற்கு சரியான சாலை வசதி இல்லை ஆகவே அமைச்சர் அதை அமைத்து தருவதற்கு உதவிடவேண்டுமென்று ஒரு வேண்டுகோளை வைத்தார். பின்னர் பேசிய அமைச்சர் நிதின்கட்காரி அதற்கென்ன இந்த நிறுவனத்திற்கு செல்ல புதிய சாலையை உடனே போடுவதோடு மட்டுமில்லாமல் இதனை தேசிய நெடுஞ்சாலையோடும் இணைத்து விடுகிறேன் என்று மேடையிலேயே அறிவித்தார்..
இப்படி பல்வேறு வகைகளில் பாபா ராம்தேவ்க்கு மோடி அரசு விதியை மீறி பல சலுகைகளை கொடுத்து வளர்த்து விட்டிருக்கிறது. இத்தனையும் எதற்காக என்றால் தனது இந்துத்துவ கொள்கையை வளர்ப்பதற்கும், அதற்கான நிதி ஆதாரத்தை தான் ஆட்சியில் இருக்கும்போதே வளப்படுத்தவுமே இந்த சலுகைகள் தொடர்ந்து கொடுக்கப்படுகிறது.
இதை மறைக்கவே யோக செய்கிறோம் அமைதியை நிலைநாட்டுகிறோமென்று சாமியார் பாபா ராம்தேவ்வும் பிரதமர் மோடியும் நாடகத்தை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
தகவல்கள்:
1.https://www.reuters.com/investigates/special-report/india-modi-ramdev/
2.https://communalism.blogspot.in/2014/03/india-modi-and-baba-ramdev-tied-in.html
3.http://www.mid-day.com/articles/elections-2014-baba-ramdev-supporters-root-for-modi-at-yoga-gurus-show/15178075
4.http://www.narendramodi.in/yoga-can-be-our-cultural-ambassador-we-can-reach-out-to-the-world-through-this-medium-6067
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.