15/07/2017

இரட்டை இலை சின்னம் லஞ்சம் வழக்கு , டெல்லி போலிஸ் பல்டி , குற்றப் பத்திரிக்கையில் தினகரன் பெயரை நீக்கியது. ஜனாதிபதி தேர்தல் ஆதரவே காரணம் எதிர்கட்சிகள் விமர்சனம்...


இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டு டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் அவர் ஜாமினில் வெளியே வந்தார். இந்நிலையில் டெல்லி போலிசார் தாக்கல் செய்த குற்றபத்திரிக்கையில் தினகரன பெயர் நீக்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என டெல்லி போலிஸ் குற்றபத்திரிக்கையில் கூறியுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் பாஜக அரசிற்கு ஆதரவு அளிப்பதாக தினகரன் கூறியதன் பின்னணியே வழக்கில் இருந்து அவர் பெயர் நீக்கப்பட்டதாகவும் , வழுக்கட்டாயமாக தங்களுக்கு ஆதரவு அளிக்க வைக்கவே தினகரன் மீது ஆரம்பத்தில் வழக்கு போடப்பட்டதாகவும் எதிர் கட்சிகள் விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர்.

தினகரன் பெயர் நீக்கப்பட்டதால் விரைவில் அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்படுவார் என எதிர் பார்க்கப்படுகின்றது இதனால் அதிமகவில் தினகரன் கை ஓங்கி வருகின்றது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.