சீதாப்பழத்தை, கர்ப்பிணிகள் சாப்பிட்டு வந்தால் உடல் வலிமையாவதுடன், பிறக்கும் குழந்தையின் வளர்ச்சியும் நல்ல நிலையில் இருக்கும். சருமத்தை அழகாக்கும். தோலுக்கும் முகத்துக்கும் பளபளப்பைக் கொடுக்கும்.
இதில் உள்ள மெக்னீசியம், உடலில் நீர்ச் சத்தை தக்கவைக்கும்.
பக்கவாதம், மாரடைப்பு, புற்றுநோய் எதிர்ப்புச்செயல்களில் இந்தப் பழத்தின் பங்கு அதிகம்.
சீதாப்பழத்தைச் சாப்பிட்ட பிறகு தோல், விதைகளைத் தூக்கி எறியாதீர்கள். விதையை அரைத்து, பாசிப்பருப்பு மாவில் கலந்து தலையில் தேய்த்து வந்தால், பேன், பொடுகு நீங்கும். கூந்தல் மிருதுவாகும்.
பழத்தின் தோல் பற்சிதைவு, ஈறுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலிகளுக்கு நிவாரணி. மலச்சிக்கலைக் கட்டுப்படுத்தும். இந்த மரத்தின் பட்டைகள், நீரிழிவு நோய்க்கும் இதன் இலைகள் நோய்த்தடுப்புக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
சீதாப்பழம் உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவதால், இரவு நேரங்களில் சாப்பிடும்போது, வெந்நீரில் சிறிது நேரம் ஊறவைத்து அதன் வெப்பநிலை சற்று உயர்ந்தவுடன் சாப்பிடலாம்.
எல்லா வயதினரும் உண்ணக்கூடியது. குறைந்த விலையில் கிடைக்கக் கூடியது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.