விவசாய விளைநிலங்கள் வழியாக உயர்மின்போபுரங்கள் அமைப்பதை எதிர்த்து மிக கடுமையான போராட்டங்களை பல விவசாய சங்கங்கள் இணைந்து உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான கூட்டியிக்கத்தின் சார்பில் மேற்கொண்டு வருகிறோம்.
அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணியை முற்றிலுமாக நிறுத்தவேண்டும் என்று கோரிவரும் சூழலில் இன்று (21/09/18) கூட்டியக்க வழக்கறிஞர் ஈசன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க நாமக்கல் மாவட்ட செயலாளர் பெருமாள், தர்மபுரி மாவட்ட செயலாளர் ஆறுமுகம், கரூரான், மாதன்* ஆகியோர் பென்னாகரம் அருகே உள்ள வரகூரான்கொட்டாய் என்ற இடத்தில் மாரிபச்சை என்ற விவசாயி நிலத்தில் அவரது ஆட்சேபணையை மீறி உயர் மின்கோபுரத்தில் கம்பி இழுக்க முயற்சி நடந்தபோது சம்பவ இடத்திற்கு சென்று மாவட்ட ஆட்சியர் உத்தரவு இல்லாமல் வேலை செய்ய வேண்டாம் என்று வலியுறுத்திய போது அரசு ஊழியரை பணிசெய்யவிடாமல் தடுத்தாக கூறி தர்மபுரி பெரும்பாலை காவல்துறையினரால் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டு காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
சம்மந்தபட்ட நில உரிமையாளர் ஆட்சேபனை செய்த பின்பு இந்திய தந்தி சட்டம் பிரிவு 16 ன்படி மாவட்ட ஆட்சியரின் முன்நுழைவு அனுமதியின்றி திட்டப்பணிகளை செய்வது சட்டவிரோதம், இந்த சட்டவிரோத செயலை சட்டப்படி மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று வேலை செய்ய கூறிய உழவர்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் பாதிக்கப்பட்ட உழவர்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளதை கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் & ஏர்முனை இளைஞர் அணி சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.
மேலும் உழவர்களுக்காக போராடி கைது செய்யப்பட்டுள்ளவர்களின் மீதான வழக்கை உடனடியாக வாபஸ் பெற்று நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம்...
- ஏர்முனை இளைஞர் அணி..
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.