நீங்கள் அன்புணர்வின் கதிர்களை வெளிப் படுத்திக் கொண்டிருந்தால் மொத்தப் பிரபஞ்சமுமே உங்களுக்காக எல்லாவற்றையும் செய்வது போலவும், அனைத்து மகிழ்க்கியான விஷயங்களையும் உங்களை நோக்கிச் செலுத்துவது போலவும், எல்லா நல்லவர் களையும் உங்களை நோக்கி நகர்த்துவது போலவும் தோன்றலாம். உண்மையும் அதுதான்.
உறவு ஒன்றைக் கவர்ந்திழுக்க நீங்கள் விரும்பினால் உங்களுடைய எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் மற்றும் சூழல்கள் ஆகியவை உங்களுடைய விருப்பத்தோடு முரண்படாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
உங்களுக்கு நீங்களே அன்பும் மரியாதையும் செலுத்திக் கொள்ளுங்கள்.
உங்களிடம் அன்பும் மரியாதையும் செலுத்தும் நபர்களை நீங்கள் கவர்ந்திழுப்பீர்கள்.
நீங்கள் உங்களைப் பற்றி மோசமாக உணரும் போது, அன்பைத் தேடுகிறீர்கள்.
அதோடு உங்களைத் தொடர்ந்து அந்நிலையிலேயே வைத்திருக்கும் நபர்களையும் சூழல்களையும் கவர்ந்து இழுக்கிறீர்கள்.
உங்களிடம் நீங்கள் நேசிக்கும் குணங்களில் கவனம் செலுத்துங்கள். உங்களிடம் இருக்கும் மேலும் அதிகமான சிறப்புகளையும் ஈர்ப்பு விதி உங்களுக்குக் காட்டிவிடும்.
உங்களுடைய சக்தியை சரியான முறையில் இடம்பெயரச் செய்து நீங்கள் வேண்டுபவற்றை உங்கள் வாழ்வில் அதிகமாகக் கொண்டு வருவதற்கு சிறந்த செயல்முறை நன்றியுணர்தல் ஆகும்.
நீங்கள் வேண்டும் என்று விரும்பிய வற்றிற்கு, முன்னதாகவே நன்றி தெரிவிக்கும் செயல், உங்களுடைய ஆசைகளை முடுக்கிவிட்டு, பிரபஞ்சத்திற்கு இன்னும் சக்தி வாய்ந்த சமிக்ஞையை அனுப்பும்.
உங்களுக்கு வேண்டியதை நீங்கள் மகிழ்ச்சியாக அனுபவித்துக் கொண்டிருப்பது போன்ற காட்சியை உங்கள் மனத்தில் உருவாக்குவது தான் அக்காட்சியின் படைப்பாகும்.
அகக்காட்சிப் படைப்பில் ஈடுபடும்போது அவற்றை இப்போதே கொண்டிருக்கும் உணர்வையும் எண்ணங்களையும் உருவாக்குகிறீர்கள்.
நீங்கள் உங்கள் மனக்கண்ணால் என்ன பார்த்தீர்களோ? அதே யதார்த்தத்தை ஈர்ப்பு விதி உங்களுக்கு திருப்பி அளிக்கும்.
ஒரு நாளின் இறுதியில், தூங்கப் போவதற்கு முன்பு அன்றைய தினத்தின் நிகழ்வுகளை மனக் கண்ணால் பாருங்கள்.
ஏதாவது ஒரு நிகழ்வோ, அல்லது தருணமோ, நீங்கள் விரும்பியபடி அமைய வில்லை என்றால் அதை அழித்துவிட்டு நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்று விரும்பியிருந்தீர்களோ அப்படி நடை பெற்றதைப் போல உங்கள் மனத்தில் மாற்றி ஓடவிட்டுப் பாருங்கள்.
அடுத்த நாள் நீங்கள் விரும்பியபடி எல்லாம் மாறிவிடும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.