28/07/2018

சிலுவை_யுத்தங்கள் -2...


சிலுவை யுத்தங்களின் அறிமுகத்தை முதற் பகுதியில் பார்த்தோம் பிற்பகுதியை இரண்டில் காண்போம்.

உலகின் எப்பிரதேசத்திலிருந்தும் கிறிஸ்துவர்கள் ஜெருஸலம் வந்து பைதுல் முகத்தஸைத் தரிசிக்கும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

முஸ்லிம்களின் முதலாவது கிப்லா அமைந்துள்ள ஜெருஸலத்தை அண்டிய பகுதிகளில் கிறிஸ்துவப் பாதிரிகளுக்கும் மதகுருக்களுக்கும் முஸ்லிம் கலீபாக்களினால் சிறப்பு விடுதிகள் அமைத்துக் கொடுக்கப்பட்டன.

கி.பி− 969 இல் பாதிமிய்யரின் ஆதிக்கத்துக்குக் கீழ் இப்பிரதேசம் வந்ததன் பின்னால் மேலும் பல வசதி வாய்ப்புகள் கிறிஸ்தவர்களுக்குச் செய்து கொடுக்கப்பட்டன.

கிறிஸ்தவர்களுக்கு எல்லா வகையிலும் ஆதரவு வழங்கிய பாதிமிய்ய ஆட்சியாளர்கள் அவர்களின் வர்த்தகத் துறைக்கும் பெரும் ஊக்கமளித்தனர்.

இவ்வளவு உரிமைகளும் சலுகைகளும் வழங்கப்பட்டிருந்தும் ஜெருஸலம் தொடர்ந்து முஸ்லிம்களின்

அதிகாரத்தின் கீழ் இருப்பது இவர்களின் மனதை உறுத்திக் கொண்டிருந்தது.

எப்படியாவது இதனைக் கைப்பற்றியாக வேண்டும் என்ற உள்நோக்குடனேயே அவர்கள் செயல்பட்டு வந்தனர்.இதன் வளர்ச்சிக்கட்டம் தான் அவர்களை முஸ்லிம்களுக்கெதிரான யுத்தத்தில் ஈடுபடவைத்தது.

இவ்வாறு இவர்கள் இப்போரில் ஈடுபட பல காரணங்கள் உள்ளன.

மேலும் இப்போருக்கான காரணங்களை அடுத்த அத்யாயத்தில் காண்போம்.

- தொடரும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.