ஒரு செல் உயிர் முதல் மனிதன் வரை இங்கு இனப்பெருக்கம் செய்கிறது தனது சந்ததிகளை உருவாக்கிக் கொண்டே உள்ளது,
இந்த நிலை தொடர்ந்து எதற்க்காக நடைபெற்று கொண்டே உள்ளது ?
மனிதனின் விந்தனுவானாலும் சரி, ஒரு மரத்தின் விதை ஆனாலும் சரி இங்கு தொடர்ந்து ஒரு செயலைத்தான் செய்கின்றன அது தான் நினைவுகளை கடத்துதல்.
நினைவுகள் (Memory) என்பது நம் மனதில் நினைப்பது மட்டும் அல்ல நாமே நினைவுகளாக மட்டுமே உருவெடுத்துள்ளோம். ஏனென்றால் இங்கு அனைத்துமே நினைவுகளின் கட்டமைப்புகளாக மட்டுமே உள்ளது,
உதாரணமாக மகன் தந்தை போல் இருக்கிறான், நடக்கிறான், தாத்தாவை போல் சிரிக்கிறான் மற்றும் ஒரு நாய் குட்டி அதன் தாயை போல் உள்ளது இவையெல்லாம் வெறும் உடலும், உருவமும் மட்டும் அல்ல அனைத்துமே நினைவுகள்(Memory).
நாம் இங்கு செய்யும் ஒவ்வொரு செயலும் நினைவுகளாக உள்ளது.
உதாரணமாக கடைகளில் நாம் வாங்கும் ஒரு குறிப்பிட்ட Brand பொருள் ஏற்கனவே பலமுறை விளம்பரங்கள் மூலம் நம் நினைவில் பதிய வைக்கபட்டத்தின் விளைவே ஆகும்.
நினைவுகளின் கட்டமைப்பு என்பது இல்லாததையும் உருவாக்கும் ஆற்றல் கொண்ட திறவுகோல்.
நம் அன்றாட வாழ்வில் தினமும் பொருள் சேர்ப்பதிலும், சம்பாதிப்பதிலுமே அனைத்து நினைவுகளையும் செலவிடுகிறோம், நாம் இதனை தொடர்ந்து செய்வது மூலம் தொடர்ந்து நம் சந்ததிகளும் இதன் உருவகமாகவே ஓட ஆரமிக்கின்றன, இந்த முடிவற்ற சுழற்சியை தடுத்து நம் மன நிறைவுடன் வாழ நம் நினைவுகளை இயற்கை பக்கம் திருப்ப வேண்டும்.
இயற்கையான காடுகளை காப்பதன் மூலமும் புதிய காடுகளை உருவாக்குவதன் மூலம் நமது வணிக ஓட்டம் நிறுத்தப்பட்டு இயற்கையுடன் இயைந்து வாழ முடியும்.
உயிர்களுக்கு ஆற்றல் தரும் சந்திரன்,சந்திரகிரகமான இன்று நமக்கும் அணைத்து உயிர்களுக்கும் அதிகளவு ஆற்றல் கிடைக்கும் இந்நேரத்தில் நம் அனைவரும் ஒரு சேர ஒரு நினைவுகடமைப்பை ஏற்படுத்துவதன் மூலம் அதனை எளிதில் அடையாளம்.
எனவே அனைவரும் இன்று இரவு இயற்கையான காடுகள் காப்பதற்கும் மேலும் காடுகள் வளரவேண்டும் என ஒரு சேர நினைப்போம்.
தங்களால் முடிந்தவரை மரகன்றுகளை நட்டு பராமரியுங்கள்.
Save and Regenerate Forest...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.