28/07/2018

சிலுவை யுத்தங்கள் - 1...


அறிமுகம்...

எனதருமை சகோதரர்களே நமது இஸ்லாமிய சமூகம் எத்தனையோ இன்னல்களை கடந்து வந்துள்ளது. அதில் கோரமானதும் மனிதாபிமானமற்ற ஒரு வரலாற்று நிகழ்வு என்றால் அது சிலுவைப் போர்கள் தான்.

மேலும் இப்பதிவின் மூலம் சிலுவை வீரர்களின் உண்மை முகத்தையும், யூதர்களின் செயல்பாட்டையும், அரசியல் ரீதியாகவும் பார்க்கவுள்ளோம்.

சிலுவை யுத்தங்களின் தொகுப்புகளை பற்பல் புத்தகங்களின் துணைக் கொண்டு பதிவிடப் போகிறேன். இதனால் இப்பதிவில் வரும் வரலாறுகள் அனைத்தும் அதன் மூல ஆசிரியர்களுக்கே சொந்தமானது என்பதனை கவனத்தில் கொண்டு நாம் பாதையைத் தேடி பயணத்தைத் தொடரலாம்.

சிலுவை யுத்தங்கள் என்பது கிறிஸ்தவர்கள் முஸ்லிம்களின் கட்டுப்பாட்டிலிருக்கும் பைத்துல்அக்ஸாவை கைப்பற்றி, முஸ்லிம்களை அவர்களின் மதரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தோற்கடித்து இஸ்லாமிய கிலாஃபத்தை அடித்து நொருக்கும் நோக்கோடு மேற்கொள்ளப்பட்டது எனலாம்.

இந்தப் போர்களில் ஈடுப்பட்ட ஐரோப்பிய வீரர்கள் இது கிறிஸ்துவர்களின் புனிதப்போர் என அடையாளம் காட்டுவதற்காக சிலுவை அடையாளங்களைத் தமது ஆடைகளில் எழுதிக்கொண்டு யுத்தத்தில் ஈடுபட்டதனால் சிலுவை யுத்தம்  எனப் பெயரிடப்பட்டது.

இஸ்லாமிய அரசின் இரண்டாம் கலீபா உமர்(ரழி) அவர்களின் காலத்தில் தான் ஹி−15 ஆம் ஆண்டு ஜெருஸலம் முஸ்லிம்களின் ஆட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டது.ஆயினும்,
அக்காலந்தொட்டே கிறிஸ்தவர்களுக்குரிய சகல உரிமைகளும் சுதந்திரங்களும் முஸ்லிம் ஆட்சியாளர்களால் வழுங்கப்பட்டு வந்தன.

இஸ்லாமிய ஆட்சி முழுவதிலும் சுதந்திரமான முறையில் யூத, கிறிஸ்தவர்கள்  தமது நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பூரண அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.மேலும்,
முஸ்லிம் அரசாங்கத்தில் உயர் பதவிகளும் அவர்களில் தகுதியானோருக்கு வழங்கப்பட்டிருந்தன.

அவர்கள் வாழ்ந்த குடியிருப்புப் பகுதிகளிலெல்லாம் முஸ்லிம் கலீபாக்களினாலேயே  தேவாலயங்களும் கிறிஸ்துவ மடங்களும் அமைத்துக் கொடுக்கப்பட்டன.

சிலவேளைகளில் கலீபாக்களின் சொந்தச் செலவிலேயே அவர்களது வணக்கஸ்தளங்களின் திருத்த வேலைகளும்,நிர்மாண வேலைகளும் நடந்தேரின.

தொடரும்....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.