21/12/2018

ஆக்ஞா தியானம்...


ஆக்ஞா தியானம் செய்பவர்களுக்கு உடல் மிக வெப்பம் அதிகரிக்கும். அந்நேரம் சூடு தணிய இங்கே சந்தனம் பூசுவார்கள்.

மருத்துவ ரீதியாக உடலுக்கு மிக முக்கியமான ஹார்மோன் சுரக்கும் பிட்யூட்டிரி சுரப்பியை தூண்டச் செய்யும் இடம் இந்த நெற்றி ஆகும்.

ஆக்ஞா தியானம் என்பதே இந்த சுரப்பியை தூண்டத் தான். இது தொடக்கம்.

நீறில்லா நெற்றி பாழ். என்பார்கள்.

எரிவது என்றால் தீயோடு எரிவது. தீ
இல்லாமல் வெறும் கனலால் எரிவதை நீறுதல் என்பார்கள்.

சுண்ணாம்பு தயாரிக்க சிப்பி தோடையும் வெறும் நீரையும் சேர்க்கும் போது அது நீறத்துவங்கும் கொதிக்கும், நெருப்பு இல்லாமல் புகையும், அதில் நெருப்பு இல்லை. ஒரு வகை வேதி வினை. அதை நீற்றுதல் என்பார்கள். அதை போல நீற்றி
எடுக்கப்பட்டது திருநீறு.

ஆக்ஞா (நெற்றி) தியானம் மேலும் நெற்றி என்பதை இதே போல நீற்ற வேண்டும், நீறிக்கொண்டிருக்க வேண்டும்.

அதாவது சுண்டு விரலை நமது நெற்றிப் பொட்டில் தொட்டும் தொடாமலும் நேராக பிடித்தால் நெற்றியில் ஒருவித உணர்வு ஏற்படும். அந்த உணர்வை அப்படியே
வைத்து தியானம் செய்யவது ஆக்ஞா (நெற்றி) தியானம், இது குண்டலினி யோகாவின் தொடக்கம்..

இதை யோகா இடங்களில் சொல்லித் தருவார்கள்.

பண்டைய சித்தர்கள் சொல்லிச்சென்ற உயிர் வளர்ப்பு முறையின் தொடக்கம் இது.

இதை முறையாக செய்தால் நம் சிந்தனைகள் சீர்படும், மற்றவரை விட அதிகமாக சிந்திக்கலாம். மனம் ஒருநிலைப்படும். எதையும் எளிதாக புரிந்து கொள்ள முடியும், காரிய சித்தி உருவாகும்.

இதை முறையாக செய்ய வேண்டும், இந்த தியானம் செய்தால் கண்டிப்பாக சாந்தி தியானமும் செய்ய வேண்டும், இல்லையென்றால் அது ஒற்றைத்
தலை வேதனையில் கொண்டு வந்து
விட்டுவிடும்.

இதை நம்மிலேயே வைத்துக்கொண்டு
செய்யாமல் இருப்பது பாழ். அதுதான் நீறில்லா நெற்றி பாழ்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.