நம்மை நாகரீக நகர வாழ்க்கையில் இருந்து விடுவிக்க இன்னும் ஆயிரம் இடர்கள் இயற்கை கொடுத்தாலும் நாம் மட்டும் அதனை சிறிதளவும் ஏற்றுகொள்ளாமல் கடந்து செல்கிறோம்...
பணம் சேர்த்து உணவை மட்டுமே நுகர்கிறோம்...என்பதை ஏன் இங்கு யாரும் புரிந்துகொள்வதில்லை?...
நமது உழைப்பை கொடுத்து பணத்தை பெறாமல்... நமது உழைப்பின் மூலம் நமக்கு தேவையான உணவை உற்பத்தி செய்து நாமே நுகர்வது மிக சிறப்பாக இருக்கும்...
பணம் என்ற வெற்று தாளை சேர்த்து வைக்காமல் விதைகளை சேர்த்து வைப்போம்...
பணம் என்று வேண்டுமானாலும் தனது இயல்பை இழந்துவிடும் ஆனால் விதை என்றுமே தன் இயல்பை இழந்துவிடாது...
எதிர்காலத்தில் நம் பிள்ளைகளுக்கு தேவையானவை காகிதம் அல்ல விதைகளும் அதனை பயிர் செய்து உண்ணும் முறையும் தான்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.