20/07/2017

தமிழர் வரலாறா? சிறு கூட்டத்தின் வரலாறா - 2...


நாகர்கள்...

சமீபகாலமாக தமிழர்கள் நாகர்கள் என்ற ஒரு சொல்லாடல் பரவி வருகிறது அல்லது பரப்பப்படுகிறது... பல ஆண்டுகளுக்கு முன்பே இந்திய சட்டத்தை இயற்றியவர் நாகர்களை பற்றி கூறியிருந்தார் ஏனெனில் அவரை கூறவைத்தார்கள்... அவரை பெருமைபடுத்துவது போல் பேசி அவர்மூலம் பெளத்த மதத்தை பழங்குடிகள் மத்தியில் திணித்தார்கள்..

இப்போது விடயத்திற்கு வருவோம்..

நாகர்கள் எங்கே வாழ்ந்தார்கள் நாகநாட்டில்..

நாகநாட்டிற்கு மற்றொரு பெயர் மணிபல்லவம்..

அந்த நாகநாட்டிற்கும் புத்தருக்கும் மிகப்பெரிய தொடர்புண்டு...

நாகர்களை பற்றி தேடினால் முடிநாகர்கள் என்போர் கடல்அழிவிற்கு பின்பு மணிபல்லவத்தில் குடியேறியதாகவும் அவர்கள் தலையில் நாகவடிவ லட்சனையை வைத்து இருந்ததாகவும் வரலாற்றில் சொல்லப்படுகிறது...

(இது அப்படியே எகிப்து அரசர்களுக்கும் பொருந்தும் அதை வேறுபதிவில் விரிவாக பார்க்கலாம்)..

மேலும் சோழநாட்டு அரசன் நெடுமுடிகிள்ளி என்பவன் புகார் நகருக்கு அடிக்கடி வந்துபோன பீலிவளை என்ற நாகர்களின் தலைவியுடன் கூடி அவளுக்கு ஒரு பிள்ளையும் பிறக்கிறது. அந்த பிள்ளையை நாகநாடான மணிபல்லவத்திலிருந்து அவர்களின் வணிகக்கூட்ட கம்பளத்துசெட்டிகப்பலில் அனுப்பி வைக்கிறாள் பீலிவளை அதுவும் அங்கே இருந்த நாகர்கள் பெளத்ததை தழுவியிருந்தனர் என்பதற்கு ஆதாரமாக புத்தவிகாரத்தை மூன்றுமுறை சுற்றி பிள்ளை அனுப்பி வைக்கிறாள் பீலிவளை.

(இப்போது இருக்கும் கோவிலை மூன்றுமுறை சுற்றுவது எங்கே இருந்துவந்தது என நோக்கவும்).

பீலிவளையின் அப்பா பெயர் வளைவண்ணண் ( சங்கு நிறத்தவன்).

தமிழர்கள் சங்கு நிறந்தவர்களா ? நமது நிலத்தின் பூர்வகுடிக்கு தோல் வெள்ளையாக இருக்க முடியுமா ?

அந்த வந்த பிள்ளையார் தெரியுமா?

தொண்டைமான்இளந்திரையன்.

ஆதாரம் உங்கள் இலக்கியத்தில் இருந்தே.

(உப்பளந் தழீஇ வுயர்மன னெடுங்கோட்டுப்

பொங்குதிரை யுலாவும் புன்னையங் கானல்

கிளர்மணி நெடுமுடிக் கிள்ளி முன்னா

இளவேனி லிறுப்ப விறும்பூது சான்ற

 பூநாறு சோலை யாருமி லொருசிறைச்

தானே தமிய ளொருத்தி  தோன்ற

இன்ன ளர்கொ லீங்கிவ ளென்று

மன்னவ னறியான் மயக்க மெய்தாக்

கண்ட கண்ணினுங் கேட்ட செவியினும்

உண்ட வாயினு முயிர்த்த மூக்கினும்

உற்றுண ருடம்பினும் வெற்றிச்சிலைக் காமன்

மயிலையுஞ் செயலையு மாவுங் குவளையும்

பயிலி தழ்க் கமலமும் பருவத் தலர்ந்த

மலர்வா யம்பின் வாசங் கமழப்

பலர்புறங் கண்டோன் பணிந்து தொழில் கேட்ப

ஒருமதி யெல்லை கழிப்பினு முரையாள்

பொருவலரு பூங்கொடி போயின வந்நாள்

யாங்கொளித் தனளவ் விளங்கொடி யென்றே

வேந்தரை யட்டோன் மெல்லியற் றேர்வுழி

நிலத்திற் குளித்து நெடுவிசும் பேறிச்

சலத்திற் றிரியுமோர் சாரணன் றோன்ற

மன்னவ னவனை வணங்கி முன்னின்று

என்னுயி ரணையா வீங்கொளித் தாளுளள்

அன்னா ளொருத்தியைக் கண்டிரோ வடிகள்

 சொல்லுமி னென்று தொழவவ னுரைப்பான்

கண்டிலே னாயினுங் காரிகை தன்னைப்

பண்டறி வுடையேன் பார்த்திப கேளாய்

நாகநாடு நடுக்கின் றாள் பவன்

வாகை வேலோன் வளைவணன் றேவி

வாசமயிலை வயிற்றுட் டோன்றிய

பீலிவளை யென்போள் பிறந்த வந்நாள்

இரவிகுலத் தொருவ னிணைமுலை தோயக்

கருவொடு வருமெனக் கணியெடுத் துரைத்தனன்

ஆங்கப் புதல்வன் வரூஉ மல்லது

பூங்கொடி  வாராள் புலம்ப லிதுகேள்

மணிமேகலை– 24: 27-61)

இப்போது நகரத்தார்கள் என்ற சிறுகூட்டத்தின் வரலாற்றை கேட்போமா?

( அவர்கள் கூறுயதுபடியே ஒருவரி மாற்றாமல் பதிகிறேன் கீழே)

நகரத்தார்களாகிய நாங்கள் நாகநாட்டிலிருந்து காஞ்சிக்கு வந்தோம் காஞ்சியில் இருந்து சோழநாடு வந்தோம். அங்கே இருந்து காரைக்குடி வந்தோம் (மேலும் விரிவான தகவலுக்கு இணையத்தில் நகரத்தார் வரலாறு என தேடினாலே கிடைக்கும்).

இப்போது சொல்லுங்கள் நாகர்கள் யார்?

அது எப்படி எவனோ ஒருவனின் வரலாற்றை மொத்த தமிழர் வரலாறு என வாய்கூசாமல் சொல்லமுடிகிறது...

உடனே நகரத்தார்கள் தமிழர்கள் இல்லையா என சிறுபிள்ளை தனமாக பேசக்கூடாது .எதை வைத்து தமிழர் என்பீர்கள் தமிழர் என்பதாலா ?

இலங்கைமுஸ்லிம்களுக்கு தமிழ்மட்டும் தான் தெரியும் ஆனால் ஒருகாலத்தில் அரபியில் இருந்து வந்தவர்கள் என அவர்களே சொல்கிறார்கள்.

மீதியை உங்கள் யோசனைக்கே விட்டுவிடுகிறேன்...

செய்தி - விருத்திரன்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.