ரஜினி கட்சி ஆரம்பிக்கப் போவதாக இன்னும் தெளிவாக அறிவிக்கவில்லை. காலா படப்பிடிப்பிற்காக மும்பையில் இருக்கிறார்.
எந்திரன் 2 வெளியான பின்னரே ரஜினி உண்மையாகவே அரசியலுக்கு வருவாரா, இல்லையா என்பது தெரியும்.
இந்நிலையில் அவரது கட்சியில் லாரன்ஸ் இணைய உள்ளதாகவும், அவருக்கு பொதுச் செயலாளர் பதவி தர உள்ளதாகவும், சென்னையில் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்றும் உறுதி படுத்தப்படாத யூகத் தகவல்கள் பல வெளியாகி வருகின்றன.
ஜல்லிகட்டு போராட்டத்திற்கு பிறகு ரஜினிக்கு தமிழகத்தில் அவ்வளவு நல்ல பெயர் இல்லை என்பதால், ஓரளவு இளைஞர்களிடம் நல்ல பெயர் பெற்ற, அதே நேரம் ரஜினிக்கு விசுவாசமாக உள்ள, அதே நேரம் பிரபலமான ஒருவர் தேவையாம்.
இதனால் லாரன்ஸை அவர் பொதுச் செயலாளராக நியமிப்பார் என யூகிக்கப்படுகிறது.
நமீதாவிற்கு கொள்கை பரப்பு செயலாளர் பதவியை ரஜினி வழங்கினாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை என சிலர் வலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர்.
மீனா, ஆனந்த ராஜ் உள்ளிட்ட பல நடிகர்கள் ரஜினி கட்சியில் துண்டு போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.