ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டு.
ஆம் நாம் செய்யும் எல்லா கர்மங்களுக்கும் எதிர்வினை உண்டு.
இந்த பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதி அப்படித்தான் செயல்படுகிறது.
வெளிநாட்டவன் பல தவறுகள் செய்தாலும் அது அவனை பொருத்தவரை சரி எனவே அவன் நம்புகிறான்.
நம் ஆழ்மனம் எதை சரி என நினைக்கிறதோ அதை நாம் செய்தால் அது பாவத்தில் சேர்வதில்லை.
மனதின்கண் மாசிலன் ஆதல் என்பதின் அர்த்தம் இதுவே.
இந்த பிரபஞ்சத்தில் எதுவும் சரியும் இல்லை தவறும் இல்லை.
எனக்கு சரியாகப்படுவது, உனக்கு தவறாக படலாம். நமக்கு சரி எனப்படுவது, வேறு சமூகத்திற்கு தவறாக தெரியலாம்.
ஆம் நாம் எதை எப்படி புரிந்து கொண்டோம் என்பதில்தான் கர்மாவே செயல்படுகிறது.
ஆனால் எல்லா செயல்களும் மூலத்தை அடையவே நடக்கிறது என்பது மட்டும் உறுதி...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.