22/01/2019

கிராமசபை என்றால் என்ன?


கிராமசபை என்பது ஒவ்வொரு கிராம ஊராட்சியில் உள்ள ஜனநாயகத்தின் ஆணிவேராகும்.

கிராம ஊராட்சிகள் செவ்வனே செயல்படத் தேவையான, வெளிப்படையான மற்றும் பொறுப்பான நிர்வாகத்தினை ஊக்குவிக்கவும், திட்டமிடுதல், திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் பயனாளிகளை தேர்வு செய்தல் ஆகியவற்றில் பொதுமக்களின் பங்கேற்பினை அதிகரித்தல் மற்றும் சமூகத் தணிக்கைக்கு வழிவகுத்திட செயல் திறன் மிக்க ஒரு கிராமசபை அவசியமாகிறது.

சட்டப்படி, இரண்டு கிராமசபைக் கூட்டங்களுக்கு இடையே உள்ள காலம் ஆறுமாதங்களுக்கு மிகாமல் இருக்கும் வகையில் கிராமசபைக் கூட்டங்கள் கூட்டப்பட வேண்டும்.

ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் ஆண்டில் குறைந்தது நான்கு முறை, அதாவது ஜனவரி 26, மே 1, ஆகஸ்டு 15, அக்டோபர் 2 ஆகிய நாட்களில் கிராமசபைக் கூட்டம் நடத்த தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது.

கிராம ஊராட்சியில் உள்ள மக்கள் தொகை அடிப்படையில் அரசு கீழ்க்கண்டவாறு குறை வெண்வரம்பு நிர்ணயம் செய்துள்ளது.

கிராமசபை கூட்டத்திற்கான குறை வெண்வரம்பு மக்கட்தொகையின் அளவு
500 வரை மக்கள் தொகையுள்ள  ஊரில் 50 நபர் வரை கலந்து கொள்ளலாம் அதனைப் போல் 501 முதல் 3000 வரை மக்கள் தொகையுள்ள  ஊரில்
100 பேரும் 3001 முதல் 10000 வரை
200 பேரும் 10001க்குமேல்
300 பேரும் கலந்து கொள்ளலாம். கிராமசபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளுதல் மற்றும் கூட்ட நடவடிக்கைகளை முறையான பதிவேடுகள் மற்றும் புகைப்படம் மூலம் பதிவு செய்யவும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கிராமசபை பின் வரும் முக்கியமான பணிகளை நிறைவேற்றுகின்றது.

1. கிராம வளர்ச்சித் திட்டத்திற்கு ஒப்புதல் வழங்குதல்.

2. கிராம ஊராட்சியின் வரவு-செலவு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்குதல்.

3. அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து தகவல் தெரிவித்து வளர்ச்சிக்கான விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.

4. பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் பயனாளிகளின் பட்டியலுக்கு ஒப்புதல் வழங்குதல்.

5. திட்டப்பணிகள் செயல் பாட்டின் முன்னேற்றத்தை ஆய்வு செய்தல்.

6. தணிக்கை அறிக்கைக்கு ஒப்புதல் வழங்குதல்.

7. கிராமத்தில் உள்ள பல்வேறு இனமக்களிடையே சமுதாய மற்றும் சமூக நல்லிணக்கத்தை ஊக்குவித்தல். இதனால் இந்த கிராம சபையில் அனைவரும் பங்கு கொள்ள வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.