திருப்பூர் அரசு கலைக் கல்லூரியில் உள்ள பூங்காவுக்கு மர்ம நபர்கள் தீ வைத்ததால், சுமார் 100 மரங்கள் வரை எரிந்து நாசமாகியதும், அதைக் கண்டு ஆசிரியர்களும் மாணவ - மாணவிகளும் கதறி அழுததும் பெரும் சோகத்தை உண்டாக்கியிருக்கிறது.
திருப்பூரில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சார்பாக, 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் கல்லூரி வளாகத்துக்குள் நடப்பட்டு, 'கலாம் பூங்கா' என்ற பெயரில் பராமரிக்கப்பட்டுவந்தது. வேம்பு, புங்கை, ஈட்டி, கொய்யா, இலுப்பை உள்ளிட்ட பல்வேறு வகையான மூலிகைக் குணங்களைக்கொண்ட அந்த மரங்கள் அனைத்தும் 4 முதல் 9 அடி வரை வளர்ந்து செழித்துக் காணப்பட்டிருந்தது. இந்த நிலையில், நேற்றைய தினம் இரவு, அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் கலாம் பூங்காவில் இருந்த மரங்களுக்குத் தீ வைத்துள்ளனர். இதனால், அங்கு வளர்ந்திருந்த 100-க்கும் அதிகமான மரங்கள் எரிந்து கருகிப்போயின.
தகவலைக் கேள்விப்பட்டதும், சம்பவ இடத்துக்கு ஓடிச்சென்ற மோகன்குமார், தீயில் கருகிய மரங்களைப் பார்த்து கதறி அழத் தொடங்கினார். அதைக் கண்டு மாணவர்களும் கண்ணீர்விட்டு அழுதார்கள். இதனால் கல்லூரி வளாகமே சோகத்தில் மூழ்கியது. இதையடுத்து, சம்பவம் தொடர்பாக திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.
ஆசை ஆசையாய் மாணவர்கள் வளர்த்த மரங்கள், மர்ம நபர்களால் தீக்கிரையாக்கப்பட்ட சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.