பொருட்காட்சி நுழைவு டிக்கட் விலை 35 ஆனால் பார்க்கிங் (இருசக்கர) கட்டணம் 40, அச்சடிக்காமல் கட்டணத்தை மட்டும் எழுதிக் கொடுத்து இஷ்டத்திற்கு வசூல் வேட்டை..
ஒரு நாளைக்கு 5 ஆயிரம் பேர் என கணக்கிட்டாலும் ஒரு நாளைக்கு மட்டும் 2 லட்சம் ரூபாய் ஒரு மாதத்திறகு 60 லட்சம். யாரு பணத்தை வாங்கி யாருக்கு கொடுக்கின்றீர்கள் ?
அரசு நடத்தும் பொருட்காட்சியில் இப்படி மக்களின் பணத்தை சுருட்டலாமா ?
பெரும்பாலும் இது போன்ற பார்க்கிங் கான்ட்ராக்ட்டுகள் சமபந்தப்பட்ட அமைச்சகத்தால் கட்சிக்காரர்களுக்கு ஒதுக்கப்படும் என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது.
40 ரூபாய் கொடுத்தும் உங்கள் பைக்கின் பாகங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல அதாவது பைக்கை பிரித்து பார்ட் பார்ட்டாக திருடிச் சென்றால் அதுக்கு நிர்வாகம் பொறுப்பாகாது என்ற அறிவிப்பு வேறு என சுற்றுலா பயணிகள் அரசு பொருட்காட்சியில் தனியார் அதிக கட்டணம் வசூல் செய்வது குறித்து புகார் தெரிவித்து வருகின்றனர்...
டிக்கட் விலை 35 (பெரியவர்களுக்கு) , 20 (சிறியவர்களுக்கு)..
ஜிஎஸ்டி = 28%.
புதுசா இப்ப கார்ப்பரேஷன் வரி = 10%.
ஆக மொத்தம் 38% வரி..
பார்க்கிங் கட்டணம் 40 (இரு சக்கர). 60 (நான்கு சக்கர)...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.