மகாகவி பாரதியார் பிறந்த தமிழ் மண்ணில் இருந்து கேட்கிறேன் தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் காட்டினைத் திருத்தி விவசாயம் செய்து உயிரைக் காப்போம் என சூளுரைத்த தமிழ் மண்ணில் இருந்து கேட்கிறோம்.
காசு தான் பிரதானம் என்றால் கல்வியே எங்களுக்கு ஏழைகளுக்கு வேணாம். இதில் பள்ளிக்கு அனுப்பாத பெற்றோருக்கு தண்டணை கேலிக்கூத்தாக்காதீர்கள்.
பொருளாதார நிலையை உயர்த்த நடவடிக்கை எதுவும் எடுக்க மாட்டீங்க. நாங்க விவசாயி விவசாயம் பன்ன ஆள் கிடைக்கல. எங்களுக்கு நியாயமான விலை கிடைக்கல. ஐயா பொருளாதார நிலையை உயர்த்தி விட்டு சட்டம் போடுங்க. கல்வியை வியாபாரம் ஆக்கிய செயல் எத்தனை குடும்பத்தால் கல்வியை தொடர தொடர முடியாத நிலை வந்திருக்கு தெரியுமா மத்திய அரசே! கல்விக் கடன் வழங்க சொத்து கேட்குது வங்கி. ஏழைக் கூலி பட்டா சொத்து பத்திரத்துக்கு எங்கு போவான்.
இந்த நிலை நாட்டில் நிலவும் போது இந்த சட்டத்தால் மேலும் ஒரு சட்டத்தில் பிரிவு கூடும். துளியும் நன்மை கிடைக்கப் போவதில்லை. மாநில அரசு உடன் தலையிட்டு அனைவருக்கும் கல்வி இலவசமாக வழங்கும் வகையில் சட்டம் இயற்ற வழி வகை செய்ய வேண்டும்.
ஐயா எங்களை வாழ விடுங்கள். தாங்கள் கூறும் கல்வியால் எனது சொந்த பந்தம் உறவு பாட்டி தாத்தா எல்லோரையும் அனாதை ஆசிரமத்தில் அடைக்கலம். பணம் மட்டுமே பிரதானமான கல்வி முறை. வாழ்வியல் தெரியலை. பாரம்பரியம் தெரியலை. உரிமையை கேட்க முடியலை. அவனவன் மொழியில் கல்வி பயில வழியில்லை.
இந்த நாடு சுதந்திரமாக இருக்கிறது என்று தங்கள் மனசாட்சியைத் தொட்டு சொல்லுங்கள் அமைச்சர்களே.. போதும் அடகு வைக்க இனியும் எங்களிடம் எதுவும் இல்லை. சட்டம் போடும் முன் காமராசர் வாழ்க்கை வரலாறை படியுங்கள். நிறைய புரியும்.
அமைச்சர் ஜவடேகர் அவர்களுக்கு அகில இந்திய மக்கள் சேவை இயக்கம் ஆலோசனை..
இவண்
அகில இந்திய மக்கள் சேவை இயக்க நிறுவன தலைவர் தங்க சண்முக சுந்தரம்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.