16/01/2019

சும்மா டீ சாப்பிடுங்க.... விபத்தை தவிர்க்க போலீசாரின் புது டெக்னிக்...


சாலை விபத்துக்களை தவிர்க்க, அதிகாலை நேரத்தில் வாகனங்களை நிறுத்தி டிரைவர்களுக்கு டீ கொடுத்து  வருகின்றனர் அரியலூர் போலீசார்.

பொதுவாக நெடுஞ்சாலைகளில் சாலை விபத்துக்கள் அதிகாலை நேரத்தில்தான் நிகழ்வதாக புள்ளி விவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. டிரைவர்கள் தொடர்ந்து தூக்கமின்றி தொடர்ந்து வாகனங்களை ஓட்டி வருவதே இதற்கு காரணம்.

அதிகாலை நேரத்தில் சாலை விபத்துக்களை தவிர்க்க அரியலூர் போலீசார் மேற்கொண்டுள்ள புதுமையான நடவடிக்கை அனைவரது புருவத்தையும் உயர்த்தியுள்ளது. அாியலூர் நெடுஞ்சாலையில் அதிகாலை 1 மணி முதல் 5 மணி வரை வரும் வாகனங்களை நிறுத்தும் போலீசார் அந்த வாகன டிரைவர்களுக்கு  வெந்நீர் மற்றும் டீ  கொடுக்கின்றனர். போலீசாரின் இந்த செயல் வாகன ஓட்டிகளுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

கடந்த தினங்களுக்கு முன்பு, பொங்கல் பண்டிகை முன்னிட்டு சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும் என்பதால் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி ஜெயம்கொண்டான் துணைடிவிஷனுக்கு உள்பட்ட காவல் நிலையங்களுக்கு அரியலூர் எஸ்.பி. ஸ்ரீனிவாசன் அறிவுறுத்தி இருந்தார். இதனையடுத்து டி.பாலுர் போலீசார் சாலையில் டிரைவர்களுக்கு டீ வழங்கும் நடவடிக்கை எடுத்துள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.