ரயில் வருகையை துல்லியமாக தெரிந்துகொள்ள இனி வாட்ஸ் அப் இருந்தால் போதும்” என இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது.
வாட்ஸ் அப் மூலம் ரயில் பயண சேவையை நேரடியாக உடனுக்குடன் அளிக்க புதிய வசதி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை எப்படி பெற வேண்டும். அதாவது
முதலில் 7349389104 என்ற எண்ணை மொபைல் போனில் சேமித்துக் கொள்ள வேண்டும்
இரண்டாவதாக வாட்ஸ் அப் செயலிக்குச் செல்ல வேண்டும்.
வாட்ஸ் அப்பில் நீங்கள் சேமித்து வைத்துள்ள 7349389104 எண்ணிற்கு நீங்கள் தகவல் பெற விரும்பும் ரயில் எண்ணை அனுப்ப வேண்டும்.
அடுத்த 2 நொடிகளில் உங்கள் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வரும். அதில் ரயில் எண் என்ன?. அதன் பெயர்? எந்த தேதியில் ரயில் புறப்பட்டது? எந்த ரயில் நிலையத்தைத் தாண்டி உள்ளது? அடுத்த ரயில் நிலையத்தை எப்போது வந்தடையும்? உள்ளிட்ட தகவல்கள் அதில் வரும். அதுமட்டுமல்லாமல், ‘’நான் உங்களுக்கு சிறந்த சேவையை அளித்திருக்கிறேனா?’’ என்று கேள்வி எழுப்பப்பட்டு, கருத்தும் கேட்கப்படுகிறது. இந்த சேவையை ரயில்வே துறை, ‘’மேக் மை ட்ரிப்’’ உடன் இணைந்து அளிக்கிறது. இதனால் பயணிகள் வாட்ஸ் அப் மூலமாகவே நமக்குத் தேவையான ரயில் பயணம் குறித்த அனைத்து விவரங்களையும் நேரடியாக தெரிந்து கொள்ள முடியும்...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.