ஒடிசா மாநிலம் குர்தா - பாலாங்கிர் இடையேயான ரயில்வே போக்குவரத்தைத் தொடங்கி வைக்க நாளை பாலாங்கிர் செல்கிறார் பிரதமர் மோடி.
இதற்கிடையில், பாலாங்கிர் நகரில் ரயில்வேக்குச் சொந்தமான 2.25 ஹெக்டேர் நிலத்தில் கடந்த 2016ம் ஆண்டு நகர்ப்புற மரவளர்ப்புத் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடப்பட்டன. தற்போது அங்கு மரங்கள் நன்கு வளர்ந்துள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி நாளை பாலாங்கிர் செல்லவுள்ளதால் ஹெலிகாப்டர் இறங்கு தளம் அமைக்க அந்தப்பகுதியில் உள்ள 1.25 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள ஆயிரக்கணக்கான மரங்களை வெட்டிச் சாய்த்துள்ளனர்.
மரங்கள் வெட்டப்பட்டதற்கு எதிராக, பல இயற்கை ஆர்வலர்கள் தத்தம் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதே வேளையில், பாலாங்கிர் பகுதியில் மரங்களை வெட்ட எந்த அனுமதியும் பெறவில்லை என ஒடிசா மாநில வனத்துறையும் தெரிவித்துள்ளது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.