12/10/2018

சித்தர் ஆவது எப்படி - 9...


சித்தத்தின் வெளிச்சத்தால் வரும் அலைச்சல்...

வெளிச்சம் என்பது சிதறிய ஒளி.. ஒளி என்பது ஒரே நேர் கோட்டில் பயணப் படுவது..

சித்தம் எல்லாம் எனக்கு சிவமயமே என்று ஒரு சிவனடியார் சொன்னால் அவர் தன் வெளிச்சமான சித்தத்தை பலவகைகளில் சிதற விடாமல், ஒரே நெறியாக கொள்கையாக, ஒரே நோக்கமாக, பார்வையாக, ஒளியாக சிவ நெறிபால் மாற்றி கொண்டார் என்று அர்த்தம்...

இதை தான் தெளிந்த சித்தம் எனப்படும்...

அதாவது பல தரப்பட்ட எண்ணங்கள் செயல்பாட்டால் எது செய்வது என்று நிலை குழைந்து போகாமல், எதை செய்தால் எல்லாம் செய்வதாக ஆகுமோ, அதற்கான ஒரு எண்ணத்தோடு இருந்து தன் முழு ஆற்றலையும் சிதற அடிக்காமல், ஒரே குறிகோள் உடன் இருந்து முழு ஆற்றலையும் பயன்படுத்தி வெற்றி பெறுபவர் என குறிக்கும்..

இப்படி பட்டவர்களை ஒளி நெறியாளர்கள் என அழைக்கப் படுவார்கள்...

சித்தம் தெளிந்தாரே ஒளி நெறியாளர் ஆக முடியும்....

சித்தர்கள் தோற்றுவித்த ஒளி நெறி பீடம் ஒளி நெறியாளர்களுக்காகவே...

சித்தம் தெளியாமையாலே சிதறிய ஒளி, சிதறிய வண்ணமான வெளிச்சமாகவே இருந்து, முதலில் குறிகோள் அற்று இருப்பதும், பின் குறிகோள்களை அடிக்கடி மாற்றி மாற்றி அலைவதும், பின் ஏதாவது குறிக்கோளை பிடித்து விட்டால் அதில் முழு கவனம் செலுத்த முடியாமல், பலதரப்பட்ட எண்ண ஆதிக்கங்களால் தடைகள் ஏற்பட்டு, அந்த குறிகோளை தவற விடுவதும், இது போன்ற நெறி கெட்ட செயல்கள் நடந்து கொண்டே இருக்கும்..

சித்தம் தெளியவில்லை என்றால் வாழ் நாள் முழுமைக்கும் மனிதன் துன்பத்தை தவிர வேறு ஒன்றை அனுபவிக்க முடியாது... எதையும் அடையாமல் அலைச்சல் ஒன்றே மிஞ்சும்....

சித்தத்தின் எண்ண ஆதிக்கத்தை அடக்கவல்லது புத்தியும் அறிவுமே..

மன சாட்சியாகிய புத்தியில் நிலை கொள்ள கொள்ள புத்தி பலப் பட்டு விட்டால், பின் சித்தத்தின் எண்ண ஆதிக்கத்தை அடக்கும் வலிமை புத்திக்கு வந்து விடும்...

புத்தி பலப் படுவது மனிதனுடைய இருப்பு தன்மைதான் என்றும் அந்த இருப்பு தன்மை வாசியோகத்தில் சூரிய கலையில் முடியும் தருவாயில் கிடைப்பதை நாம் ஏற்கனவே கண்டோம்..

இருப்பு தன்மையில் இருக்க இருக்க ஒரு உள் உணர்வு தோன்றுவதை பயிற்சியில் கண்டோம்..

அந்த உணர்வு பேரண்ட பேராற்றலின் வரவாக கனலை உணர்வதே..

அப்படி உள் உணர்வை உணர உணர புத்தியில் கனல் பெருக்கம் அதிகமாகிறது..

இதை தான் குரு பீடம் உருவாகி, வலுவான குரு தோன்றுகிறார் என்கிறோம்..

உள் குரு புத்தியில் வலுவாக உட்கார்ந்து விட்டால், நம் பிரச்சனை முக்கால்வாசிக்கு மேல் தீர்ந்தது போலதான்..

நம் உள் குரு பீடம் அமைய, ஒரு உருப்படியான உபாயம், வெளிவிடும் மூச்சாகிய சூரிய கலையின் முடிவில் உணரும் கனல் தன்மை தான் என்பதை மறக்காமல், அதை சூரிய கலை முழுமைக்கும் பயின்று, அனுபவப் படும் போது, கனல் பெருக்கம் ஏற்படும்..

நாத ஒளியோடு நாம் இருக்கின்ற போதும், கனல் பெருக்கம் ஏற்படுகிறது..

அக குருவாகிய உள் குரு தோன்றி பலப்படும் போது சித்தம் அடக்கப் படுகிறது...

அடக்கப் பட்ட சித்தம் என்றாவது ஒரு நாளோ சற்று தாமதமாகவோ மீண்டும் எழுந்து ஆட தொடங்கலாம்...

சித்தத்தை தற்காலிகமாக அடக்கி அடக்கி வைத்து கொண்டாலும் ஞானம் பெற்ற உள் குரு ஒன்றே, சித்தத்தை நிரந்தரமாக சமாதானப் பெற்ற நிலைக்கு சித்தத்தை கொண்டு வர முடியும்..

அக குரு ஞான குருவாக உயர வேண்டிய அவசியம் ஆகிறது..

அதனை பின் வரும் பகுதிகளில் காணலாம்..

அக குரு பலப் பட்டு விட்டாலே போதும், வாழும் உலகில் நம்முடைய எந்த பிரச்சனை இருந்தாலும், அதனை திறம் பட சமாளிக்கும் வல்லமை வந்து விடும்..

நாம் நன்றாக வாழும் வழி நம் கையில் மட்டுமே உள்ளது...

நம்மிடம் தற்போது இருக்கின்ற புத்தியை திசை திருப்பி அதனையே, அதாவது அந்த புத்தியையே வலுப் படுத்தும் நெறிக்கு செல்வோமாக...

இதை தவிர வேறு ஒரு வழி இல்லை, இல்லவே இல்லை.. உணர்ந்து செயல் படுவோமாக...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.