காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆம்னி வேன் ஒன்றில் "PRESS" என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுருந்ததை கண்டறிந்த பத்திரிக்கையாளர்கள் அது குறித்து ஆம்னி வேன் ஓட்டுனரிடம் விசாரித்ததில் அவர் எந்த பத்திரிக்கை துறையிலும் வேலை செய்யவில்லை என்பதை கண்டறிந்தனர்.
மேலும் விசாரித்ததில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள டீ கடைகளில் கடலை மிட்டாய், பிஸ்கட்கள், நொறுக்கு தீணிகளை சப்ளை செய்ய வந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
அதையடுத்து பத்திரிகையாளர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்ததன் பேரில் ஆம்னி வேனில் இருந்த "PRESS" ஸ்டிக்கர் போலீசாரின் முன்னிலையில் அகற்றப்பட்டது.
போலீசார் இது போன்ற சோதனைகளை முறையாக மேற்கொண்டால் பல போலி நிருபர்கள் பிடிபடுவார்கள். போலி பத்திரிக்கையாளர்கள் பலபேர் ஊரில் சர்வ சாதாரணமாக சுற்றித்திருகிறார்கள்.
போலி நிருபர்களை களை எடுக்க போலீசாரிடம் பத்திரிகையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.