1) உங்கள் பஞ்சாயத்தின் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால் நீங்களும் கிராம சபை உறுப்பினரே.
2) மக்களின் கோரிக்கையை ஏற்று பஞ்சாயத்து தலைவர் எப்போது வேண்டுமானாலும் கிராம சபையை கூட்டலாம். ஆனால், மக்களுக்கு இதுபற்றி அறிமுகம் இல்லாததால், புதிய பஞ்சாயத்து ராஜ் யின் ஆரம்ப ஆண்டுகளான 1996 - 97-ல் கிராம சபைகள் நடைபெறாமல் இருந்தன.
3) கிராம சபைகள் கட்டாயமாக நடந்தாக வேண்டும் என்பது விதி. அதனால் தமிழக அரசு, வருடத்தில் 4 நாட்களுக்கு கிராம சபைகளை நடத்த வேண்டுமென அரசாணை கொண்டுவந்தது.
4) குடியரசு தினம் (ஜனவரி 26), மே தினம் (மே 1), சுதந்திர தினம் (ஆகஸ்ட் 15) மற்றும் காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2) ஆகிய நாட்களில் கிராம சபை நடைபெறுகிறது. இந்த நாட்களை தவிர மற்ற நாட்களில் கிராம சபை நடந்த மக்கள் விரும்பினால் நடத்திக்கொள்ளலாம்.
5) கிராம சபை கூட்டத்திற்கான குறைவெண் வரம்பு: 500 பேர் மட்டுமே உள்ள பஞ்சாயத்தில் 50 பேர் கிராம சபையில் கலந்துகொண்டால் போதுமானது. அவர்கள் இயற்றும் தீர்மானம் உச்சநீதிமன்றம் வரை செல்லுபடி ஆகும். அதேபோல், 3000 பேர் உள்ள பஞ்சாயத்தில் 100 பேரும், 10,000 பேர் உள்ள பஞ்சாயத்தில் 200 பேரும், 10,000 க்கும் மேல் மக்கள் தொகை உள்ள பஞ்சாயத்தில் 300 பேரும் கிராம சபையில் கலந்துகொண்டால் போதுமானது.
6) கிராமத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வளர்ச்சி, நலன், கலாச்சாரம் ஆகியவைக்காக விவாதித்து, இந்திய அரசியல் அமைப்புச்சட்டத்தின் அடிப்படை கூறுகளை மீறாமல் (மதச் சார்பின்மை, குடிமகனுக்கான அடிப்படை உரிமைகள்) தீர்மானம் நிறைவேற்றலாம். மதிப்பு மிக்க ஆவணம் கிராம சபை தீர்மானம்.
7) கிராம சபை நடக்கும் நாளுக்கும் அதற்கு முந்தய கிராம சபை நடந்த நாளுக்கும் இடைப்பட்ட காலத்தில் பஞ்சாயத்தில் மேற்கொள்ளப்பட்ட வேலைகள், வரவு - செலவு கணக்கு ஆகியவற்றை கிராம சபையில் வாசித்து மக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். இதை கூட்டத்தை ஒருங்கிணைப்போர் கட்டாயமாக செய்ய வேண்டும்.
8) கிராம சபை கூட்டத்தின் போது, வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இருந்து பார்வையாளராக ஒரு அலுவலர் வருவார். அவர் பார்வையாளர் மட்டுமே. கூட்ட நடவடிக்கைகளில் குறுக்கிட அவருக்கு அனுமதியில்லை.
9) கிராம சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின் வட்டார வளர்ச்சி அலுவலர், துணை இயக்குனர் (பஞ்சாயத்துக்கள்) மற்றும் ஊரக வளர்ச்சி இயக்குனர், சென்னை ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்படும்.
மிக முக்கியமானது, கிராம குடிமகனாகிய நாம், கிராம சபை தீர்மானங்களின் நகல்களை தவறாமல் பெற்றுக்கொள்ள வேண்டும்....
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.