22/08/2018

பிரபஞ்சமும் உணர்வுகளும்...


தீவிரமான எண்ணங்களையும் உணர்ச்சிகளையும்  மனம் பிறருக்கு ஒலிபரப்புகிறது. நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இப்போது கூட அது அப்படித்தான் செய்து கொண்டிருக்கிறது.

எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் அஞ்சல் செய்யும் போது ஏற்படும் மனோதத்துவக் கதிர்வீச்சை (AURA) என்று அழைக்கிறார்கள்.

உதாரணம்: நாய் என்று சொன்ன மாத்திரத்தில் நடுங்கும் மனிதர்கள் அந்த அச்சத்தை மானசிகமாக ஒலி பரப்புகிறார்கள். அந்த அச்சத்தின் நுண்ணொலியைக் கண்டதும் நாய்கள் உறுமுகின்றன, குரைக்கின்றன அல்லது சில சமயம் அந்தப் பயந்த மனிதர்களைத் தாக்கவும் செய்கின்றன.

தங்கள் அச்சத்தை மானசிகமாக ஒலிபரப்பும் மனிதர்களைக் கடிக்க வருகின்ற அதே நாய்கள் அவற்றிடம் உண்மையான அன்புகாட்டும் மனிதர்களை ஒன்றும் செய்வதில்லை. வாலை ஆட்டி அன்புடன் வரவேற்கின்றன.

தீவிரமான எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் ஒரு நாய்க்கு மானசிகமாக ஒலிபரப்ப முடியுமேயானால் நிச்சயமாக மனிதர்களுக்கும் மானசிகமாக ஒலிபரப்பு முடியும். மானசிக ஒலிபரப்பினால்  வாழ்க்ககையில் அதிசயிக்கத்தக்க நற்பயன் விளையக்கூடும்.

 நண்பர் நம்மை நோக்கி வந்து கொண்டிருக்கிறார் அவருக்கு நல்லெண்ணத்தை அஞ்சல் செய்வோம்
அவரது வாழ்க்கையில் என்னால் மகிழ்ச்சி சேர்க்க முடியும் என்று நம்புகிறேன். அவரது வாழ்க்கையில் மகிழ்ச்சி சேர்க்க முடியும் என்ற நோக்கத்துடன் நல்லெண்ணத்தோடு அவருக்கு ‘ஹலோ’ சொல்லுவோம்.

மானசிகமாக அஞ்சல் செய்யும் நல்லெண்ணத்தையும் வாழ்த்துக்களையும் பெற்றுக் கொண்டு அவர் பதில் வணக்கம் தெரிவிப்பார்.
தெரிவிக்கவில்லையென்றாலும் நமது நல்லெண்ண உணர்வுகள் ஆக்க சக்தியை பெருக்கும்.

நல்லெண்ணத்தையும் வாழ்த்துக்களையும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மனிதருக்கும் அஞ்சல் செய்வதன் மூலம்  வாழ்க்கைக் கண்ணோட்டம் சிறப்படைந்து  ஆக்க சக்தியும் பன்மடங்காகப் பெருகும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.