30/09/2020

முதல் இந்தி எதிர்ப்புப் போரை தொடங்கி வைத்தவர்..

 


ஈ.வெ.ரா.பெரியாரா? சோமசுந்தர பாரதியாரா?

10.8.1937இல் இராமகிருஷ்ண மடம் மாணவர் இல்ல விழாவில் கலந்து கொண்ட முதல்வர் இராசாசி இந்தி பள்ளிகளில் கட்டாயமொழி என்று அறிவிப்பு.

27.8.1937இல் கரந்தை தமிழ்ச்சங்கம் சார்பில் உமா மகேசுவரனார் இந்தித் திணிப்புக்கு கண்டனம்.

29.8.1937இல் திருநெல்வேலி தமிழ்ப் பாதுகாப்பு சங்கம் இந்தித் திணிப்புக்கு கண்டனம்.

5.9.1937இல் சென்னை செளந்தர்ய மண்டபத்தில்  முதல் இந்தி எதிர்ப்பு கூட்டத்தில் தலைமையேற்று சோம சுந்தர பாரதியார் இந்தி திணிப்புக்கு எதிராக கண்டன முழக்கம்.

4.10.1937இல் சென்னை கோகலே மண்டபத்தில் மறைமலையடிகள் தலைமையில் இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாபெரும் கண்டனக் கூட்டம். சோமசுந்தர பாரதியார் இதில் பங்கேற்பு.

26.12.1937இல் கி.ஆ.பெ.விசுவநாதம் ஒருங்கிணைப்பில் திருச்சியில் சென்னை மாகாண மூன்றாவது தமிழர் மாநாடு. இந்த மாநாட்டின் தலைவர் சோமசுந்தர பாரதியார். இதில் தான் ஈ.வெ.ராமசாமி பெரியார் முதன் முறையாக பங்கேற்பு.

21.4.1938இல் மீண்டும் முதல்வர் இராசாசி கட்டாய இந்திப் பாடம் நடைமுறைக்கு வரும் என்று ஆணை பிறப்பிப்பு.

28.5.1938இல் திருச்சியில் மந்திராலோசனைக் கூட்டத்தில் சோமசுந்தர பாரதியார் சட்டமறுப்பு இயக்கம் தொடங்க வேண்டுகோள். உடனடியாக இந்தி எதிர்ப்பு வாரியம் அமைக்கப்பட்டு அதன் தலைவராக சோமசுந்தர பாரதியாரும், செயலாளராக கி.ஆ.பெ.விசுவநாதமும், உறுப்பினர்களாக உமா மகேசுவரனார், செளந்தர பாண்டியனார், ஈ.வெ.ரா. பெரியார், கே.எம். பாலசுப்பிரமணியம் ஆகியோர் தேர்வு.

இந்தி எதிர்ப்பு வாரியம் சோமசுந்தர பாரதியாரின் வழி காட்டுதலில் இராசாசி வீடு முற்றுகை, சட்ட மன்ற முற்றுகை என்று பல்வேறு தளங்களில் போராட்டம் வீறு கொண்டது.

இந்தி எதிர்ப்புப் போரில் மறியல் செய்து சிறை சென்ற சர்வாதிகாரிகள் பதிமூன்று பேர். இந்தப் பட்டியலில் பெரியார் பெயர் இல்லை.

13.11.38இல் தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடு, 14.11.38இல் பெத்து நாயக்கன் பேட்டை கூட்டம் ஆகிய இடங்களில் பெரியார் அரசுக்கு எதிராக பேசியதாக போடப்பட்ட அவதூறு வழக்கில் தான் பெரியார் 5.12.1938 அன்று கைது செய்யப்பட்டார்.

தமிழறிஞர் முன்னெடுத்த இந்தி எதிர்ப்புப் போரில் இடையில் புகுந்து  பெரியார் தலைவரான கதை இது தான் என்பதை எத்தனை தமிழர் அறிவாரோ?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.