29/05/2018

குஜராத் மாநில அதானியின் மருத்துவமனையில் 5 மாதத்தில் 111 குழந்தைகள் உயிரிழப்பு...


குஜராத் வளர்ச்சி என்று சொல்லும் நமது பிரதமர் முதல்வராக இருந்த மாநிலத்தின் இத்தனை வருட நிலைமை...

குஜராத் அலகாபாத் அதானி தொண்டு நிறுவனம் மற்றும் அறக்கட்டளை நடத்தும் ஜி.கே மருத்துவமனையில் கடந்த 5 மாதங்களில் மட்டும் சுமார் 111 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து விசாரிக்க அம்மாநில அரசு தற்போது உத்தரவிட்டுள்ளது.குஜராத் மாநிலம் புஜ் பகுதியில் அதானி தொண்டு நிறுவனம் மற்றும் அறக்கட்டளை ஜி.கே அரசு மருத்துவமனை ஒன்று நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இங்கு 2018-ஆம் ஆண்டு துவக்கத்தில் இருந்து மே 20-ஆம் தேதி வரை சுமார் 111 பச்சிளம் குழந்தைகள் இறந்துள்ளதாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடுகையில், 18, 19 சதவிகிதங்களில் இருந்து, தற்போது, பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதம் 14 சதவிகிதமாக குறைக்கப்பட்டு இருப்பதாக மருத்துவமனை கண்காணிப்பாளர் ராவ் கூறியுள்ளார். மேலும், கடந்த ஆண்டு பிறந்த குழந்தைகளின் இறப்பு விகிதம் 21 சதவிகிதமாக இருந்தது என்றும் ஒப்புக் கொண்டுள்ளார்.

கர்ப்ப காலங்களில் பெண்கள் சத்தான உணவு கிடைக்காதது, தாமதமாக மருத்துவமனைக்கு வருவது ஆகியவையே குழந்தைகள் உயிரிழக்கக் காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குழந்தைகளின் உயிரிழப்பு தொடர்பாக வல்லுநர் குழு விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.