07/05/2018

தாஜ்மகால், பத்தேபுர் சிகிரி கட்டடங்கள் புழுதிப்புயலால் சேதம்...


உத்தரப்பிரதேசத்தில் வீசிய புழுதிப்புயல் காரணமாக ஆக்ராவில் உள்ள தாஜ்மகால் இரண்டாவது முறையாக சேதம் அடைந்துள்ளது.

கடந்த மாதம் 11ம் தேதி புழுதிப்புயல் வீசியபோது தாஜ்மகால் மற்றும் பதேபுர் சிக்ரி (Fatepur Sikri) போன்ற புகழ்மிக்க கட்டடங்கள் சேதம் அடைந்தன.

தாஜ் மகாலில் ஏற்பட்ட சேதத்தை சீரமைக்க வல்லுனர்கள் முயன்று வந்தனர். இந்த நிலையில் புதன்கிழமை வீசிய புழுதிப் புயலால் மீண்டும் சேதம் அடைந்துள்ளன.

தாஜ்மகாலின் அரச வாயில் கதவு, கோபுரம்  மற்றும் தூண்கள் சேதம் அடைந்துள்ளதாக இந்திய தொல்லியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாஜ்மகால் வளாகத்தில் ஏராளமான மரங்களும் வேரோடு சாய்ந்துக் கிடக்கின்றன...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.