12/06/2017

கொடைக்கானல் என்ற நரகபூமி.....


அமெரிக்காவின்  வாட்டர்டவுனில் இயங்கி வந்த இந்த தொழிற்சாலை அமெரிக்காவின் சுற்றுபுற சூழ்நிலையை பாதிக்கிறது என்ற குற்றச்சாட்டில்  அமெரிக்க அரசால் மூடுவிழா கண்டது.....

இப்படி மூடு விழா கண்ட  தொழிற்சாலையை தான் நம் அரசுகள் இருகறம் கூப்பி மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் வரவேற்றுள்ளனர்...

(நமக்கு அமெரிக்காவின் சுற்றுச்சூழல் தான் முக்கியம்)..

1984ஆம் ஆண்டு பாண்ட்ஸ் இந்தியாவால் தொடங்கபட்டு.... பின்னர் இந்துஸ்தான் யூனிலீவர்  நிறுவனம் கையகப்படுத்த வெகு ஜோராக உற்பத்தி தொடங்கியது இத்தொழிற்ச்சாலை.....

அமெரிக்காவிலிருந்து பாதரசத்தை இறக்குமதி செய்து தர்மாமீட்டரில் அதை நிரப்பி மீண்டும் அதை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வது  என்பது அது வெளிப்படையாக மக்களுக்கு சொன்ன தகவல்...

பாதரசம் பற்றிய அடிப்படை விழிப்புணர்வு கூட மக்களுக்கு தெரியபடுத்தாத நிர்வாகம்....

ஊழியர்களை எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் இன்றி  வெறும் கைகளால் கையாள செய்தது தான் கொடுமையின் உச்சம்..

ஆண்டுக்கு 90லட்சம் தர்மா மீட்டர்களை தயாரிப்பது  என்பது இலக்கு...

இதில் சராசரியாக 20 லட்சம் தர்மா மீட்டர்கள் உடைபடுவது வாடிக்கை என்றாலும்... அப்படி உடைபடும் தர்மா மீட்டர்களையும் அதன் கழிவுகளையும்  யாருக்கும் தெரியாமல் தொழிற்சாலையின் மணல் பகுதியில் ஆலை நிர்வாகம் ரகசியமாக புதைக்க...

சுமார் நூறுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கபட்டனர்...

ஊழியர்கள்.... கடுமையான தலைவலி.. சிறுநீரக பாதிப்புகள்.. மூளை மற்றும் நரம்பியல் பிரச்சனை.. மலட்டு தன்மை.. கற்பகால பாதிப்புகள்.. குறைபாடுகள் உடைய குழந்தைகள் பிறப்பு... பல் மற்றும் ஈறுகள் சம்மந்தமான பிரச்சனைகள் இப்படி கடுமையான  பாதிப்புகளில் சிக்க..

பின்பு தான் பிரச்சனையின் பூதாகாரம் மக்கள் தெரிந்து கொண்டனர்...

மக்களின் தொடர் போராட்டத்தால் 2003ல் இத் தொழிற்சாலை தமிழகத்தில் மீண்டும் மூடு விழா  காணப்பட்டது...

இன்னும் இதன் வீரியம் பற்றி சொல்ல வேண்டுமானால்..

ஒரு லீட்டர் நீரில் 0.002 என்ற அளவில் பாதரம் கலந்து அருந்தினாலே கிட்னிபாதிக்கபட்டுவிடும்......

இப்போ  புரியியும்னு நினைக்கிறேன்.....

நீதிமன்ற உத்தரவுகளின் படி அனுசக்தி துறை மேற்கொண்ட ஆராய்ச்சியில் மலைகளின் இளவரசி ஒட்டுமொத்தமாக பாதிக்கப்பட்டிருப்பதை (ஏரிகள்... காற்று... மீன்கள்.. மண்) சத்தமில்லாமல் ஒத்துக் கொண்டிருக்கிறது...

இந்த தொழிற்சாலையின்  290 டன் அளவிற்கான கழிவுகளை  அப்புறபடுத்த இந்நிறுவனத்தின் தலைமையகம் ஒத்துக்கொண்ட போதிலும் அதற்கான நடவடிக்கை இன்று வரை மேற்கொள்ளபடவில்லை என்பதே அதிர்சியான உண்மை...

இந்த பாதரச கழிவுகளும்.. உடைந்த தர்மா மீட்டர்களும் தொழிற்சாலையின் பின்பகுதி மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் ஏழு டன் அளவிற்கு கொட்டப்பட்டிருப்பதை மத்திய மாநில அரசுகளும்  உறுதி செய்திருக்கின்றன....

ஆலை நிர்வாகமும் அரசும் இதை எப்படி அகற்றுவது என்ற விவாதமே இன்று வரை  போய் கொண்டிருக்கிறது...

அதாவது கிட்டதட்ட 15 ஆண்டுகள்....

அதைவிட இவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்திய இந்த நிர்வாகத்தின்  மீது அரசு எவ்வித கிரிமினல் வழக்குகளையும் தொடுக்கவில்லை என்பதும்  கூடுதல் தகவல்....

ஒரு கிலோகிராம் மண்ணில் 1 மில்லி கிராம் என்ற விகிதத்தில் மட்டுமே இங்கிலாந்து போன்ற நாடுகள் அனுமதிக்கிறது...

நெதர்லாந்து போன்ற நாடுகள் ஒரு கிலோகிராமுக்கு 10 மில்லி கிராம் அளவில் அனுமதிக்கிறது...

ஆனால் கொடைக்கானலிலோ ஒரு கிலோ கிராமிற்கு 100 மில்லி கிராம் என்ற விகிதாச்சாரத்தில்  இந்த கழிவுகள் கலந்திருப்பதாக ஆய்வுகள் உறுதிபடுத்திருக்கின்றன ..

பாதிக்க பட்ட மக்களும் இன்று வரை நீதிக்காகவும்.. நிவாரணங்களுக்காகவும் நீதிமன்ற கதவுகளை தட்டிக் கொண்டிருக்க..

எஞ்சியுள்ள மக்களும் தங்கள் பங்குக்கு அந்த ஆலகால விஷத்தை பருக கொடைக்கானலுக்கு  படையெடுத்த வன்னமே உள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.