மருதையாறு குறுக்கே அணை கட்டி கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ஏரிக்கு சுமார் 20 கி்.மீ. தூரம் கால்வாய் மூலம் தண்ணீர் கொண்டு வர கடந்த 25 ஆண்டுகளாக போராட்டம் நடத்தியும் அரசிடம் கோரிக்கை வைத்தும் இது நாள் வரை நடவடிக்கை எடுக்க வில்லை.
கடந்த ஆண்டு பட்ஜெட்டிலும் அறிவிப்பு வெளியிட வில்லை. சமீபத்தில் அரியலூரில் எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவின் போது முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார் என விவசாயிகள் எதிர்பார்த்தனர் அப்போதும் அறிவிப்பு வெளியிட வில்லை.
நடப்பு பட்ஜெட் கூட்டத்தில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் அறிவிப்பு வெளியிடாததைக் கண்டித்து கரைவெட்டி பரதூர் கிராம விவசாயிகள் ஆத்திரமடைந்து இந்த திட்டத்திற்கு ரூ. 10 கோடி மட்டுமே செலவாகும் என அதிகாரிகள் தரப்பில் கூறுகிறார்கள் குறைந்த பட்ச நிதியைக் கூட அரசு ஒதுக்க முன் வராத தைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த திட்டம் நிறைவேற்றப்படும் போது விவசாயிகள் 50000 ஏக்கரில் விவசாயம் செய்ய இயலும். கரைவெட்டி பரதூர், கீழக்காவட்டாங்குறிச்சி, தூத்தூர் வரை 36 பஞ்சாயத்துக்குட்பட்ட விவசாயிகள் பயன்பெறுவர் என்பது குறிப்பிடத்தக்கது...
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.