19/06/2017

நியூட்ரினோ திட்டத்தில் விடை தெரியாமல் இருக்கும் பல கேள்விகள் உள்ளன, அவற்றுள் முக்கியமான கேள்வி கோலார் பற்றியது...


60 களின் தொடக்கத்தில், இந்திய விஞ்ஞானிகள், கோலார் தங்க சுரங்கத்தில் நியூட்ரினோ தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள ஆரம்பித்து, அடுத்த சில ஆண்டுகளில் நியூட்ரினோவை பிடித்து வெற்றிகண்டார்கள்.

குறிப்பாக முவான் வகைகளை பற்றிய விசயங்களை கண்டறிய முடிந்தது. 1992 ஆம் ஆண்டு வரை அந்த ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றன, கோலார் சுரங்கம் மூடப்பட்டதால் நியூட்ரினோ ஆராய்ச்சியும் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

நம்முடைய கேள்விகள் என்னவென்றால், அன்று அறியப்பட்ட நியூட்ரினோ குறித்த தகவல்களால் இந்தியாவிற்கு என்ன நன்மை கிடைத்தது? நாங்கள் ஏதோ நேற்றைக்கு கண்டுபிடிக்கப்பட்டு இன்றைக்கு பலன்கள் என்ன, என்று கேட்கவில்லை, ஆனால் கிட்டத்தட்ட 49 ஆண்டுகள் கழித்து தான் பலன்கள் குறித்த கேள்விகளை எழுப்புகிறோம்.

அடுத்த கேள்வி, ஆய்வுகள் எங்கே நடைபெறுகிறதோ அங்கேயே தான் விரிவுபடுத்தியிருக்கவேண்டும் ஆனால் அங்கே செய்யாமல் தேனி மாவட்டத்திற்கு வர வேண்டிய அவசியம் என்ன?

கோலார் தங்க சுரங்க ஆராய்ச்சி கூடத்தை மூட ஏன் அனுமதித்தார்கள் என்கிற கேள்விக்கு இதுவரை பதில் இல்லை.

சில தரவுகளில் கோலாரில் இருந்த ஆராய்ச்சி கூடத்தில்  "நீர் கசிவு" அதிகமாக இருந்ததால் அங்கே தொடர முடியவில்லை என்ற பதிவுகள் இருந்தன, அந்த தகவல்கள் உண்மையென்றால் "நீர் கசிவை" சரி செய்வது தான் சரியான தீர்வாக இருந்திருக்கும்.

அதைவிட்டு, பாதுகாக்கவேண்டிய மேற்கு தொடர்ச்சியை உடைத்து, குடைந்து, பல்லாயிரம் கோடிகளை செலவு செய்யும் தேவைகள் என்ன, நோக்கம் என்ன ?

கேள்விகள் தொடரும், பதில்கள் தருவதற்கு தான் ஆட்கள் தேவை. ....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.