19/06/2017

பாஜக மோடி அம்பானிக்கும், அதானிக்கும் கூலிக்கு மாரடித்தால் இப்படித்தான் நடக்கும்...


மோடி அரசு இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் திட்டங்கள் என்று அறிமுகப்படுத்தப்பட்ட மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் எதிர்பார்த்த அளவில் செயல்படுத்த முடியவில்லை.

இதனால் இத்திட்டங்களின் நோக்கத்திற்கு எதிர்மாறாக இந்த அறிவிப்புகள் வேலையின்மை அதிகரியிருத்திருக்கிறது என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியாவின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாக இருப்பது வேலையின்மையே.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் தோல்வி அடைந்துவிட்டதாக குற்றம்சாட்டியது பாஜக.

கடந்த 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது, ஆண்டிற்கு ஒரு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம்.

தொழில்முனைவோர்களுக்கு தகுந்த வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதற்கும் முன்னுரிமை வழங்கப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்தது.

இந்த நிலையில் இரயில்வே துறையில் தனியார் பங்களிப்புகளை அதிகப்படுத்தியதின் விளைவாக 11,500 பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இனியாவது மத்திய அரசு வேலையின்மைக்கான காரணிகளை கண்டறிந்து, வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான மாற்று திட்டங்களை செயல்படுத்தி வேலையில்லாத இளைஞர்களுக்கு தகுந்த வேலை வாய்ப்பை உருவாக்கித்தந்திட வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.