27/05/2018

ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள கிராமங்களின் நிலத்தடி நீர் முற்றிலும் மாசடைந்துள்ளது -- மாசு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் ரகசிய ஆய்வறிக்கை...


144 தடை விதித்து ஸ்டெர்லைட் ஆலைக்கு பாதுகாப்பு கொடுக்கும் அதே அரசு, ஸ்டெர்லைட் ஆலை வளாகத்திற்குள் மற்றும் அருகேயுள்ள கிராமங்களின்  நிலத்தடி நீர் முற்றிலும் மாசடைந்திருப்பதை அறிவியல் ரீதியாக அறிந்தும் ஆய்வறிக்கையை ரகசியமாக வைத்துள்ளது. இது மக்களுக்கு எதிரான அரசின் போக்கை எடுத்துக்காட்டுகிறது.


மார்ச் 28-ஆம் தேதி தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மட்டும் RDO உள்ளிட்ட குழு ஒன்று ஸ்டெர்லைட் வளாகத்திற்குள் ஏழு இடங்களிலிருந்தும், ஸ்டெர்லைட் அருகே உள்ள கிராமங்களில் 8 இடங்களிலிருந்தும் நிலத்தடி நீர் மாதிரிகளை சேகரித்து வாரியத்தின் ஆய்வகத்தில் ஆய்வு செய்துள்ளது. ஆய்வறிக்கையின் அடிப்படையில்தான் நடவடிக்கை எடுக்கப்படும் என சொன்ன அரசு, ஆய்வறிக்கை தயாரானதும் ரகசியமாகவே வைத்துள்ளது.


தகவல் பெரும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி பெற்ற அறிக்கையில் நீர் மாதிரி எடுத்த 15 இடங்களிலுமே நிலத்தடி நீர் குடிப்பதற்கு தகுதியற்றவை என கூறப்பட்டுள்ளது. சல்பேட் (sulphate), கால்சியம் (calcium), மெக்னீசியம் (magnesium), ஈயம் (lead), பிளோரைட் (fluoride) போன்ற அளவுருக்கள் இந்திய தரநிலைகள் பணியாகத்தால் (Bureau of Indian Standards) நிர்ணயிக்க பட்ட குடிநீர் தர அளவுகளை விட பல மடங்கு அதிகமாக காணப்பட்டுள்ளது.

குழந்தைகளின் நரம்பு மண்டலத்தை மட்டும் மூளை வளர்ச்சியை தாக்கும் ஈயம் அளவு பாதுகாப்பு தர அளவைவிட -- அதாவது 0.01 மில்லிகிராம்/லிட்டர் -- 4 மடங்கிலிருந்து 55 மடங்கு அதிகமாக காணப்பட்டுள்ளது.


தெற்கு வீரபாண்டியபுரத்தின் நீர் மாதிரியில் 0.55 மில்லிகிராம்/லிட்டர் அளவில் -- அதாவது தர அளவை விட 55 மடங்கு அதிகமாக -- ஈயம் காணப்பட்டுள்ளது.

குமரேட்டிப்புரம் பேருந்து நிலையத்தின் அருகே எடுத்துள்ள நீர் மாதிரியில் ஈயம் அளவு தர அளவைவிட 39 மடங்கு அதிகமாக காணப்பட்டுள்ளது.


 காயலூரணியின் நீரில் ஈயம் 46 மடங்கு அதிகமாவும், பண்டராம்பட்டியின் நிலத்தடி நீரில் 40 மடங்கு அதிகமாகவும், சில்வர்புரம் மற்றும் மாடத்துரில் 21 மடங்கு அதிகமாகவும், மீளாவிட்டானில் 11 மடங்கு அதிகமாகவும் ஈயம் காணப்பட்டுள்ளது. ஈயம் சிறுநீரகத்தையும் மத்திய நரம்பு மண்டலத்தையும் தாக்கும் வீரியமான விஷ காரணியாகும்.

சில்வர்புரம், மீளாவிட்டான் மற்றும் மாடத்துரின் நிலத்தடி நீரில் எலும்புகள் மட்டும் மூட்டுகளை தாக்கும் பிளோரைட் என்ற காரணியின் அளவு பாதுகாப்பு தர அளவை விட அதிகமாக உள்ளது.

திருநெல்வேலி மருத்துவ கல்லூரியால் 2008-இல் வெளியிடப்பட்ட சுகாதார ஆய்வறிக்கையில் ஸ்டெர்லைட் வளாகத்தை சுற்றியுள்ள கிராமங்களில் தசை மற்றும் எலும்புகளின் கோளாறுகள் அதிகமான அளவில் காணப்பட்டுள்ளன.


கண்டுபிடிக்கப்பட்ட அளவுருக்களில் கால்சியம், ஸல்பேட் (sulphate) மற்றும் பிளோரைட் ஸ்டெர்லைட் ஆலை வளாகத்திற்குள் எடுக்கப்பட்ட மாதிரிகளிலும் அதிகமான அளவில் காணப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட்டில் குவிந்து கிடக்கும் பாஸ்போ சிப்ஸும் என திட கழிவை சரியான முறையில் கையாலாவிட்டால் அதிலிருந்து கால்சியம், ஸல்பெட் (sulphate) மற்றும் பிளோரைட் போன்ற ரசாயனங்கள் கசிந்து சுற்றுவட்டாரத்தில் இருக்கும் நிலத்தடி நீரை மாசு படுத்த கூடும் என்பது பலரும் அறிந்த விஷயம்.

தனது உரிமம் ரத்து செய்ததை தாக்கி ஸ்டெர்லைட் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மேல் முறையீடு அதிகாரத்துவதில் தொடர்ந்த வழக்கில் ஸ்டெர்லைட் பல ஆவணங்கள் வழங்கியுள்ளது. அதில் 2016 மற்றும் 2017-ஆம் ஆண்டில் 16 இடங்களிலிருந்து எடுக்கப்பட்ட நிலத்தடி நீரிலுள்ள அதிகபட்ச மாசலவு 32 முடிவுகளாக குறிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்களை ஸ்டெர்லைட் தனது தொழிற்சாலையினால் எந்த மாசும் ஏற்படவில்லை என ஆதாரமாக கொடுத்துள்ளது. ஆனால் தகவலின் கண்டுபிடிப்புகளோ, ஸ்டெர்லைட்டின் வாதத்திற்கு நேர் மாறாக கூறுகிறது.

காண்பிக்கப்பட்ட 32 முடிவுகளில் 31 முடிவுகளில் மொத்த கரைந்துள்ள உப்பின் அளவு தர அளவை விட அதிகமாக காணப்பட்டுள்ளது.

காண்பிக்கப்பட்ட 32 முடிவுகளில் 30 முடிவுகளில் ஸல்பேட் அளவு தர அளவை விட அதிகமாக காணப்பட்டுள்ளது.

பிளோரைட் அளவு 6 முடிவுகளில் அதிகமாக காணப்பட்டுள்ளது.

கால்சியம் அளவு 31 முடிவுகளில் அதிகமாக காணப்பட்டுள்ளது.

மெக்னீசியம் அளவு 30 முடிவுகளில் அதிகமாக காணப்பட்டுள்ளது.

இரும்பு அளவு 28 முடிவுகளில் அதிகமாக காணப்பட்டுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.