23/07/2017

எங்களை இந்து மதத்திலிருந்து விடுவியுங்கள்.. லிங்கா சமுதாய மக்கள் பேரணி...


இந்தியாவில் இஸ்லாமியர்கள், கிறித்தவர்களை தவிர ஏனைய மதங்களை சேர்ந்தவர்களையும், கடவுள் மறுப்பாளர்களையும் இந்து என்றே அரசியல் சாசன சட்டத்தில் வரையறுத்துள்ளனர்.

அந்த வகையில் லிங்கா சமுதாய மக்களையும் இந்து என்றே வரையறுத்துள்ளனர்.

இந்நிலையில் கர்நாடகா மாநிலத்தில் லிங்கா சமுதாயத்தை சேர்ந்த 1 லட்சம் பேர் பேரணியில் கலந்து கொண்டு தங்களை இந்து மதத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறுகையில்...

கர்நாடக மாநிலத்தில் மட்டும் சுமார் 60 லட்சம் லிங்கா சமுதாய மக்கள் வாழ்கின்றனர்.

இந்துக்கள் 33 கோடி கடவுள்களை வணங்கி வருகின்றனர். அவர்களில் 33 கடவுள்கள் மிக முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக வணங்கப்பட்டு வருகின்றனர். கடவுள்களுக்கு உருவம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் லிங்கா சமூகத்தை பொறுத்தவரை ஒரே இறைவனை வணங்க வேண்டும் என்ற கொள்கையை கொண்டதாகும். அந்த ஒரு இறைவனுக்கும் உருவம் இல்லை,

நாங்கள் எந்த வகையிலும் இந்துக்கள் அல்ல..

லிங்கா சமூக மக்கள் கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, ஆந்திரா மற்றும் வட மாநிலங்களிலும் லிங்கா சமூக மக்கள் வாழ்கிறார்கள்.

லிங்கா சமூகம் இந்து மதத்தின் ஒரு பிரிவாக கூட இருந்ததில்லை, மாறாக எதிர் எதிர் கொள்கையில் உள்ள கொள்கையாகும்.

எனவே லிங்கா சமூகத்தை இந்து மதத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் பிரம்மாண்டமான பேரணியை நடத்துகிறோம். என்றார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.